பெரிசா என்ன
பன்னிட்டாரு பெரியார்...?
……………………………………
என்னை என் நண்பர்
ஒருவர் கேட்டார் .
பதில் சொல்வது
பெரியார் பேரனாகிய என்
கடமையல்லவா?
நான்: சமீபத்தில் விமானவிபத்தில்
இறந்த ஆந்திர முதல்வர் பேரு ?
நண்பர் : இது என்னகேள்வி சிறு பிள்ளைக்குக் கூடதெரியுமே ராஜசேகர ரெட்டி .
நான்: சரி ஆந்திராவின் முன்னாள்
முதல்வர் பேரு என்ன?
நண்பர் : சந்திரபாபு நாயுடு.
நான்: சரி,நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு?
நண்பர் (சற்றுஎரிச்சலோடு)எடப்பாடி
அதுக்குமுன்னாடி பன்னீர்செல்வம்
நான்: சரி, முன்னால்முதல்வர் பேரு என்ன ?
நண்பர்: ஜெயலலிதா .
நான்: அவருக்கு முன் ?
நண்பர் : கருணாநிதி.
நான்: கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்
ஜாதி உண்டு தான் என்றாலும் அந்த
பின் இணைப்பு இங்கு இல்லை
ஆந்திராவில் இருக்கு .அந்த சாதியைப்பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் பெரியார்.
அந்த அளவில் அவர்பெரியார்.சரிதானே ?
தமிழ்நாட்டில் இன்றும்
முனுசாமி
முனுசாமி ரெட்டியாக இல்லாமல்
முனுசாமியாகவும்,
முத்துபாண்டி
முத்து பாண்டி தேவராக இல்லாமல்
முதுபாண்டியாகவும் இருக்க
பெரியார் தான் காரணம் என்றால் அது
மிகை அல்ல……
No comments:
Post a Comment