Friday, March 24, 2017

சிக்கல்களைக் கையாளுதல்

        மனிதர்கள் தினந்தோறும் வெவ்வேறுவிதமான அனுபவங்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். ஒருவரின் அனுபவம் மற்றவருக்கு வழிகாட்டுவதற்கு பயன்படுமேயன்றி அந்த அனுபவத்தின் நிகழ்வுகளோ தீர்வோ மற்றவர்களின் அனுபவத்தோடு ஒத்துப்போவதற்கு பத்துகோடியில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது.
         
                   வாழ்வியல்சிக்கல்களைச்
சந்திக்கும்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் பரபரப்பாக முடிவுகளை எடுப்பதும்
உணர்ச்சியின்பிடியிலும் கொந்தளிப்பான மனநிலையிலும்
பரபரவென்று முடிவுகளை எடுக்கும்போதும் புதியசிக்கல்களுக்கு விதை விழுந்து விருட்சமாக வேரூன்றி நின்றுவிடும்.ஆகவே எந்தச்சூழ்நிலையிலும் விவேகமற்ற பதற்றத்தில் மேற்கொள்ளப்படுகிறமுடிவுகள் நல்லபலன்களைத்தருவதில்லை என்பதை உணரவேண்டும்.
பிரச்சினைகளை அவை மேலும் சிக்கல்களுக்கு உள்ளாக்குவதோடு பொருளாதார ,உறவுகளில் இழப்புகளுக்கும் வழிவகுத்துவிடும்.
      பிரச்சினைகளை அணுகும்போது உணர்ச்சிகளுக்கு இடம்தராது அறிவினடிப்படையில் நிதானமாகவும் தீர்க்கமாகவும் எதிர்கால பின்விளைவுகளைக் கருத்தில்கொண்டும் முடிவுகள் எடுங்கள். 
                  
 உங்களுடைய முடிவுகள் யாரையும் காயப்படுத்தாதவகையிலும் ,நேர்வழியிலும், எவருக்கும் பாதிப்பு எற்படாதவகையிலும்,கேள்விகளுக்குவாய்ப்பளிக்காதவகையிலும்,வெளிப்படைத்தன்மையுடையதாகவும் இருக்கட்டும்.
                            முடிவுகள்எடுக்கும்போது பதற்றநிலையையும் உணர்ச்சிகளுக்கு ஆட்படாதும் இருப்பது அவசியம்.
உணர்ச்சிகளுக்கும்பதற்றத்துக்கும் இடையில் எடுக்கப்படுகிற முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
                  இலாகவமாகவும் எளிதாகவும்,அணுகவேண்டியவைகளைஅறிவின்துணையோடும்,
அறிவிற்சிறந்தமூத்தோரின்
வழிகாட்டுதலின்படியும்,அன்பு சார்ந்தும் அணுகுங்கள்.

              நான் பதவியில் உயர்ந்தவன்
வயதில் மூத்தவன் என் முடிவுகளே சிறப்பானவை என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்.

                    உங்கள்  அன்புக்குரிய குழந்தைகளிடமிருந்துக்கூட
 உங்கள் சிக்கலுக்கு உயரிய தீர்வுகள் கிடைக்கலாம்.

                          திறந்தமனதோடும்
பெருந்தன்மையோடும் பிரச்சினைகளை அணுகும்போது உங்கள் எதிராளிகளுக்குக்கூட உங்கள்மீது  அளவுகடந்த  அன்பும்   மட்டற்ற மரியாதையும்  நற்மதிப்பும் உண்டாகும் . இது நல்ல சூழலை உருவாக்கும்.
                                   
                           முரண்டுபிடித்துக் கொண்டு பிரச்சினைகளை அணுகினால் இரண்டு பூனைகள் ஆப்பத்தை பங்கிட்டுக்கொள்ள குரங்கிடம் போய் ஏமாந்து நின்ற கதை தான் நிகழும்  . இழப்புகளையும்சந்திக்க
வேண்டிவரும்.
           உணர்ச்சிவசப்படாது அறவழியில் விவேகத்தோடு பிரச்சினைகளை அணுகுங்கள்.

                எதிராளியை.  திகைக்க
வைக்கவோ,திக்குமுக்காடவைக்க
வேண்டுமென்றோ,விளம்பரத்திற்காகவோ ,பரபரப்பிற்காகவோ வாழ்க்கையில் பிரச்சினைகளை அணுகாதீர்கள். 




விதை :
எந்த விஷயத்தையும், பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள்.

உறவைமேம்படுத்தும் சிந்தனைத்துளிகள். - துளி3

SankaranNsk

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk