Monday, October 31, 2016

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக
மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது.

எல்லைகள்

தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

மதராஸ் மாகாணம்

தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரிப் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 - ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

பாரம்பரியம்

ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கும் முன்னதாகப் பழங்கற் காலத்தில் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் தமிழ் மொழியில் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; உலக அளவிலான பாரம்பரியக் களங்கள் எட்டு தமிழ்நாட்டில் உள்ளன.

நகர இந்தியாவின் சின்னம்

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11- வது இடத்தில் உள்ளது. மக்கள்தொகையில் ஏழாவதாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவதாக உள்ளது.

மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கக்கூடிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் 2006 - ஆம் ஆண்டில் இந்தியாவின் பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இந்தியாவிலேயே அதிகமாக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலம் இதுதான். இந்தியாவின் 6 சதவீத மக்கள்தான் இங்கே வசிக்கின்றனர். ஆனால் இந்தியாவின் 10.56 சதவீத வணிக நிறுவனங்கள் இங்கே உள்ளன.

இந்தியா உருவாக்குகிற மொத்த வேலை வாய்ப்புகளில் 9.97 சதவீதம் தமிழகத்திடம் உள்ளது. அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிற இந்திய மாநிலங்களில் இரண்டாவதாக இது உள்ளது. அது மட்டுமல்ல… தொழிற் சாலைகள் எண்ணிக்கையிலும் மொத்த தொழில்துறை உற்பத்தியிலும் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கறிக்கோழி வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

வெளிநாடுகளின் நேரடி மூலதனத்தைப் பெறுவதில் இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.ஆட்டோமொபைல் தொழில் செழித்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

🔵 *SankaranNsk* 🔵

Thursday, October 20, 2016

கதை

ஒரு திகில் கதை.
# படித்து பயந்தது #
.
அது ஒரு மலைப் பிரதேசம். நல்ல இருட்டு நேரம்.
கடுமையான மழை.
.
சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை.
பஸ் ஒன்றும் வருவதாகவும் தெரியவில்லை.
ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது.
.
பஸ் ஸ்டாப்பில் அவர் அருகில் வந்து நின்றது.
.
சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை.
.
கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார்.
.
கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.
.
அப்பொழுதுதான் சூசை கவனித்தார்,
டிரைவர் சீட்டில் யாருமே இல்லை.
.
ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

சூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.

சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி.

செத்தோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ஸ்டீயரிங் வீலை திருப்பியது.
பயத்தின் உச்சத்துக்கு சென்ற சூசைக்கு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார்.

.
கொஞ்ச தூரத்தில் ஒரு ஹோட்டல் தெரிந்தது.
.
ஒரே ஓட்டமாக அங்கே ஓடினார்.

“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு” என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.
.
ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.
.
அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டோடு உள்ளே நுழைந்தனர்.

அவர்களில் ஒருவன் சூசையை சுட்டிக்காட்டி,
“இந்த ஆளுதான். ரிப்பேரான காரை
நாம மழையில
தள்ளிக்கிட்டு வரும்போது உள்ளே
ஏறி உக்காந்தவன்”
என்றான்.

Wednesday, October 19, 2016

Check out @sankaran_nsk's Tweet: https://twitter.com/sankaran_nsk/status/788524503366193152?s=09

Monday, October 17, 2016

உப்பமா திருவிளையாடல்

உப்புமா திருவிளையாடல்
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?

நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை.
இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.

சிவன் : என்ன குற்றம் கண்டீர்?

நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?

சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி
ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே
கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து
எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து
வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே!

நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?

சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.

நக்கீரர் : இப்பாட்டிலிருந்து எம்மன்னருக்குத் தாங்கள் கூறும் முடிவு?

சிவன் : ஹஹஹா! புரியவில்லை? பெண்களுக்கு இயற்கையிலேயே ரவா உப்புமா செய்யும் ஆற்றல் உண்டு என்பதுதான் நான் கூறும் முடிவு.

நக்கீரர் : ஒருக்காலும் இருக்க முடியாது. அன்னையிடம் சமையல் நன்றாகக் கற்றுக் கொள்வதாலும், தொடர்ந்து சமையல் செய்யத் தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

சிவன் : தேவலோகப் பெண்களுக்கு?

நக்கீரர் : அவர்களுக்கும்தான்
சிவன் : சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கித் தூங்கி வழிகிறானே கும்பகர்ணன்? அவன் மனைவிக்கும் இதே கதிதானோ?

நக்கீரர் : அவளென்ன! நான் அன்றாடம் என் நினைவில் வைத்திருக்கும் சமையற்கலை வல்லுனன் நளமகராஜனின் இடப்பக்கம் அமர்ந்துள்ள தமயந்திக்கும் இதே கதிதான்.

சிவன் : அங்காடியில் விழுந்து புரண்டு அரிசியும் பருப்பும் தலையில் சுமந்து டெபிட் கார்டில் உள்ள மினிமம் பேலன்ஸும் கரைத்து வீட்டிற்கு சென்று ஏன் தாமதமாக வந்தாய் என பல்பு வாங்கும் கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன் : பல்பு வாங்குவது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – பல்பை
டெஸ்ட் செய்து வாங்குவோம்! உன்னைப் போல்
ஃப்யூஸ் போன பல்பாக ஒரு போதும் இருக்க மாட்டோம்!!

சிவன் : நக்கீரா! நன்றாக என்னைப் பார். நான் எழுதிய தமிழ்ப் பாட்டில் குற்றமா?

நக்கீரர் : நீரே முக்கண் முதல்வராயும் ஆகுக. உமது நெற்றியில் ஒருகண் காட்டிய போதும் உடம்பெல்லாம் கண்ணாக்கி சுட்ட போதிலும் குற்றம் குற்றமே! "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

சிவன் : நக்கீ. . . . . .ரா!

மன்னர் : இறைவா! சொக்கநாதா! ஜோதிச் சுடரே! ஆராயாமல் எதிர்வாதம் செய்த நக்கீரனை மன்னிக்க வேண்டும். விலை மதிப்பற்ற எங்கள் தலைமைப் புலவனை மீண்டும் உயிர் பெறச் செய்ய வேண்டும்.

சிவன் : செண்பகப் பாண்டியா! சினம் இல்லை எமக்கு. வேதனையை விடு. எமது விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. கொதிக்கும் ரேஷன் கடை பாமாயிலை மேலே ஊற்றியதால் ஏற்பட்ட காயத்தின் வெம்மை தாளாமல் அவதியுறும் நக்கீரர் நலமுடன் எழுந்து வருவார்.

நக்கீரர் : இறைவா! பரம்பொருளே!
உப்பும் நீயே!
பருப்பும் நீயே!
கோல்டு வின்னரும் நீயே!
பாசுமதி ரைஸும் நீயே!
கத்தரிக்காயும் நீயே!
புடலங்காயும் நீயே!
வெங்காயமும் நீயே!
தக்காளியும் நீயே!
அறியாமல் வாதம் செய்த என்னை மன்னியுங்கள்.
சிவன் : நக்கீரரே! உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம். வந்திருப்பது இறையென்றறிந்தும் சாப்பாட்டின் மீது உங்களுக்கிருந்த பற்றின் காரணமாக "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட உங்கள் வாதம் வெகு சூப்பர்!
Whatsapp Share.

வைரவிழா

வைர விழா...
அக்டோபர் 14,15 தேதிகளில்
இனிதே நடந்தேறியது.
சிறந்த ஆளுமைகளின் உரைகளால் மேடை பொலிந்தது.
மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் இடையிடையே பார்வையாளர்களை உற்சாகமூட்டின.
தமிழ்,வேளாண்மை ,காவிரி என மேடை பன்முகம் கொண்டதோடு
பள்ளியில் உறியடி,பச்சைக்குதிரை என மைதானம் மாணவர்களின் உற்சாகத்தால் நிரம்பிவழிந்தது.

Monday, October 03, 2016

.தெரியாது.


கல்லணையை கட்டிய கரிகாலனைத் தெரியாது.......
மிக பெரிய போர் வீரன் சோழனைத் தெரியாது........
முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனைத் தெரியாது.......
.
முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரைத் தெரியாது.......
.
குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மரு திருவரைத் தெரியாது .......
.
முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியைத் தெரியாது........
.
டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனைத்
தெரியாது.......
.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனைத் தெரியாது .......
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளைக் கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியைத்தெரியாது.....
.
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியைத்தெரியாது........
.
வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது........
.
இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே.
இவர்களைப்போல
இன்னும் பல
லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.
.
அவர்கள் யாரையும் இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு தெரியவைப்பதற்கான
எந்த வேலைகளும்
இன்றைக்கு
எந்த மெட்ரிக்குலேசன்பள்ளியிலோசிபிஎஸ்ஸிபள்ளியிலோ
கிடையாது....
.
போராட்டகுணங்களை மழுங்கடித்து
எல்லாவற்றையும்
ஏற்று பழகிக்கொள்ளும்
ஒரு தலைமுறையை உருவாக்கி வரும்
பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.
வரலாற்றை
அழிப்பதே கட்சிகள் செய்த சாதனை..
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்
நம் தமிழனின்
வரலாற்றை சொல்லிக்கொடுக்க
தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே இன்று நாம் செய்யும் மிகச்சிறந்த சாதனையாக இருக்கிறது.

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk