Monday, July 19, 2021

கண்ணதாசன் வரிகள்

" நெருப்பினை நிலவே என்பார் -
நீசனைத் தலைவன் என்பார் -
கழுதையை யானை என்பார் -
கருமையை வெண்மை என்பார் -
உருப்படாதவனை எல்லாம் உயரத்தில் ஏற்றி வைப்பார் -
செருப்பினை மதிக்கும் தேசத்தில் பிறந்தேன் பாவி ! "
கண்ணதாசன். 

Wednesday, May 05, 2021

வலைப்பூக்கள் சில

இணையத்தில் பல பதிவர்களின் வலைப்பூக்களை
ரசித்து படிப்போம்...
-
நேரம் கிடைக்கும்போது இந்த பதிவர்களின் வலைப்
பக்கங்களை பார்வையிடுங்கள்...
-
1123 வலைப்பூக்கள் பட்டியல் Cleardot
1 - தமிழ் ச்சி - http://thamizhsasi.blogspot.com
2 - Wethepeople - http://wethepeopleindia.blogspot.com/
3 - குழலி - http://kuzhali.blogspot.com
4 - லக்கிலுக் - http://madippakkam.blogspot.com/
5 - வெளிகண்டநாதர் - http://ukumar.blogspot.com
5 - வைசா - http://vaisasview.blogspot.com/
6 - கோ. இராகவன் - http://iniyathu.blogspot.com/
7 - செல்வராஜ் - http://selvaraj.weblogs.us
8 - கானா பிரபா - http://kanapraba.blogspot.com/
9 - குமரன் - http://abiramibhattar.blogspot.com/
10 - ப்ரியன் - http://priyan4u.blogspot.com/
11 - முத்துகுமரன் - http://muthukumaran1980.blogspot.com/
12 - இராம. கி - http://valavu.blogspot.com
13 - தேவ் - http://sethukal.blogspot.com/
14 - SK - http://aaththigam.blogspot.com/
15 - செந்தழல் ரவி - http://tedujobs.blogspot.com/
16 - ரவிசங்கர் - http://thamizhthendral.blogspot.com/
17 - செல்வநாயகி - http://selvanayaki.blogspot.com/
18 - இலவசக் கொத்தனார் - http://elavasam.blogspot.com/
19 - கோவிகண்ணன் - http://kaalangkal.blogspot.com
20 - கண்ணபிரான் ரவி - http://madhavipanthal.blogspot.com
21 - நாமக்கல் சிபி - http://pithatralgal.blogspot.com/
22 - கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
23 - தமிழச்சி - http://thamizhachi.blogspot.com/
24 - துளசிகோபால் - http://thulasidhalam.blogspot.com/
25 - சுப்பையா - http://devakottai.blogspot.com/
26 - சுல்தான் - http://sultangulam.blogspot.com/
27 - பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
28 - திரு - http://aalamaram.blogspot.com/
29 - வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
30 - பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
31 - அசுரன் - http://poar-parai.blogspot.com/
32 - ராஜவனஜ் - http://vanajaraj.blogspot.com/
33 - தருமி - http://dharumi.blogspot.com/
34 - சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com
35 - G Gowtham - http://gpost.blogspot.com/
36 - சிந்தாநதி - http://valai.blogspirit.com/
37 - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com/
38 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
39 - பாலபாரதி - http://balabharathi.blogspot.com/
40 - இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/
41 - முத்துதமிழினி - http://muthuvintamil.blogspot.com/
42 - ப்ரதீப் - http://espradeep.blogspot.com/
43 - ப்ரியா - http://aanmeegham.blogspot.com
44 - ம்ங்கை - http://manggai.blogspot.com/
45 - உஷா - http://nunippul.blogspot.com/
46 - ப்த்ரி - http://thoughtsintamil.blogspot.com/
47 - சுகுணா திவாகர் -
48 - வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com/
49 - பொட்டிக்கடை - http://potteakadai.blogspot.com/
50 - பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com
51 - லிவிங் ஸ்மைல் - http://livingsmile.blogspot.com/
52 - ஜோ - http://cdjm.blogspot.com/
53 - டோண்டு - http://dondu.blogspot.com
54 - விடாது கறுப்பு - http://karuppupaiyan.blogspot.com/
55 - விட்ட்து சிகப்பு - http://vittudhusigappu.blogspot.com/
56 - முகமூடி - http://mugamoodi.blogspot.com/
57 - மருதநாயகம் - http://maruthanayagam.blogspot.com/
58 - சபாபதி சரவணன் - http://wewakeananda.blogspot.com/
59 - விக்கிபசங்க - http://wikipasanga.blogspot.com/
60 - கால்கரி சிவா - http://sivacalgary.blogspot.com/
61 - வஜ்ரா சஙகர் - http://sankarmanicka.blogspot.com/
62 - ம்யூஸ் - http://bliss192.blogspot.com/
63 - ஜெயராமன் - http://vaithikasri.blogspot.com/
64 - ஹ்ரிஹரன் - http://harimakesh.blogspot.com/
65 - முரளீதரன் - http://adhvaithi.blogspot.com/
66 - செல்வன் - http://holyox.blogspot.com
67 - சுவனப்பிரியன் - http://suvanappiriyan.blogspot.com/
68 - தங்கமணி - http://bhaarathi.net/ntmani/
69 - தமிழ்குழந்தை - http://tamilchild.blogspot.com/
70 - மகேந்திரன் பெ - http://kilumathur.blogspot.com/
71 - நெல்லை சிவா - http://vinmathi.blogspot.com
72 - badnewsindia - http://badnewsindia.blogspot.com
73 - மதுரா - http://tamizhachchikal.blogspot.com/
74 - திவ்யா -
75 - கைப்புள்ள - http://kaipullai.blogspot.com/
76 - பத்மா அர்விந்த் - http://sakhthi.blogspot.com
77 - ஈழநாதம் - http://akavithai.blogspot.com/
78 - கார்திக்வேலு - http://intamil.blogspot.com/
79 - சித்தார்த் - http://tamizh.rediffblogs.com/
80 - ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com/
81 - நிவேதா - http://rekupthi.blogspot.com
82 - voice on wings - http://valaipadhivan.blogspot.com/
83 - யளனகபக' கண்ணன் - http://knski.blogspot.com/
84 - பெயரிலி - ??
85 - பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/
86 - சுந்தரவடிவேல் - http://bhaarathi.net/sundara/
87 - பொடிச்சி - http://peddai.net/
88 - நிர்மலா - http://nirmalaa.blogspot.com/
89 - அருள் கந்தசுவாமி - http://arulselvan.livejournal.com/
90 - சன்னாசி - ??
91 - நயனம் - http://nayanam.blogspot.com/
92 - மதிகந்தசாமி - http://mathy.kandasamy.net/musings/
93 - மா சிவகுமார் - http://masivakumar.blogspot.com/
94 - மு கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com/
95 - DJ thamizan - http://djthamilan.blogspot.com/
96 - vaa manikandan - http://pesalaam.blogspot.com
97 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
98 - இளவஞ்சி - http://ilavanji.blogspot.com/
99 - கார்த்திக் ராம்ஸ் - http://karthikramas.blogspot.com/
100 - சீனு - http://jeeno.blogspot.com/
101 - தாரா -
102 - ரஜினி ராம்கி - http://rajniramki.blogspot.com/
103 - அரை ப்ளேடு - http://araiblade.blogspot.com/
104 - கப்பி பய - http://kappiguys.blogspot.com
105 - எழில் - http://ezhila.blogspot.com/
106 - ஜ்டாயு - http://jataayu.blogspot.com/
107 - சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com/
108 - சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com/
109 - கெளசி -
110 - பங்காளி - http://pangaali.blogspot.com/
111 - அபுமுஹாய் - http://abumuhai.blogspot.com/
112 - சுமதி -
113 - மாசிலா - http://naalainamathae.blogspot.com/
114 - mayuran - http://www.mauran.blogspot.com/
115 - நற்கீரன் - http://www.worldinmind.blogspot.com/
116 - அஞ்சலி - http://anjalisplace.blogspot.com/
117 - தேக்கிட்டான் - http://thekkikattan.blogspot.com/
118 - உருப்படாத்து - http://urpudathathu.blogspot.com/
119 - ஐகாரஸ் - http://icarus1972us.blogspot.com/
120 - சீமாச்சு - http://seemachu.blogspot.com/
121 - சரவ் - http://sarav.net/
122 - ரவி ஸ்ரீநிவாஸ் - http://ravisrinivas.blogspot.com
மகிழ்ச்சி - செந்தில்குமர - http://ariviyalaanmeekam.blogspot.co

Sunday, May 02, 2021

அளபெடை குறள்களின் எண்கள்.

அளபெடை என்பது என்ன ? : குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

செய்யுளில் ஓசை குறையும்போதும்,
சீரும், சீர்களுடன் இணையும் தளைகளும் சிதையும்போதும்,  செய்யுள் இலக்கணத்தில் குற்றம் ஏற்படும். அதனை
நிறைவு செய்வதற்கும், செய்யுளின் ஓசை
இனிமையாக அமையும் பொருட்டும்,
செய்யுளின் சிலவிடங்களில் அளபெடைகள்
அமைத்து இயற்றப்படுகின்றன.


       அதாவது, 
*  ஒரு நெடில் தனக்கு இனமான குறிலை
    உடன்சேர்த்துக் கொள்ளும்.


* குறிலாக இருந்தால், அது நெடிலாக 
   மாறித் தன்னினத்தை அளபெடுத்துக் 
   கொள்ளும்.


* சில வேளைகளில், ஓர் ஒற்றெழுத்தும்
   தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்)
    கொள்வதும் உண்டு.



    + அளபெடுத்தல் என்பது, செய்யுளிலுள்ள
        நின்றசீர், வருஞ்சீர்க்கு ஏற்பத் தன்
        அமைப்பில் மாற்றம் செய்துகொள்ளும்
        வகையாகும்.


    + இவ் அளபெடை என்பது :-


(1) இசைநிறை அளபெடை -அல்லது
       செய்யுளிசை அளபெடை;


(2) இன்னிசை அளபெடை;


(3) சொல்லிசை அளபெடை


(4) ஒற்றளபெடை


      என நான்கு வகைப்படும்.


இவற்றை விரிவாகக் காண்போம்.




(1) இசைநிறை அளபெடை அல்லது
***************************************
      செய்யுளிசை அளபெடை:-
**********************************



     இது, செய்யுளில் ஓசை குறையும்போதும்,
      சீரும் தளையும் சிதையும் போதும் , 
     அசையை நிறைப்பதற்காக
      அளபெடுக்கும்.


எ- கா:-


" ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர். ".    (குறள்# 653)


   இக்குறளில் 'ஓ' என்னும் உயிர்நெடில்
தனக்குரிய இனக்குறில் 'ஒ ' வை
அளபெடுத்துள்ளது. இரண்டாவது அடியில்
'ஆ' என்னும் உயிர்நெடில் தனக்கு இனமான
'அ' குறிலை அளபெடுத்துள்ளது.
      அளபெடுக்காத நிலையில், ' ஓதல்'
என்னும் சீர் 'தேமா' -வில் உள்ளது. வெண்பா இலக்கணப்படி, நின்ற சீர் 'மா' - வில் இருந்தால் வருஞ்சீரில் 'நிரை' (மாமுன்
நிரை) வருதல் வேண்டும். ஆனால்,,வரும்
சீரில் ' வேண்டும் ' என 'நேரில்' அமைக்க
விரும்பிய வள்ளுவர் , நின்ற சீரை , வரும்
சீருக்குத் தளைதட்டாமல் அமைக்கும் பொருட்டு, ஓதல் என்பதனை, 'ஓஒதல்' என
விளச்சீராக்கி ('கூ விளம் ' ஆக்கி), 
'விளமுன் நேர்' வரச்செய்து வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்துள்ளார் என்பதனை அறியவும். 
          இரண்டாம் அடியில் உள்ள, 'ஆஅதும்'
என்பதும் இவ்வகையில் அமையப் பெற்றதே. இவ்வளபெடைகள் சீரின்
இசையை நிறைவு செய்வதால் இசைநிறை 
அளபெடைகள் ஆயின.


(2) இன்னிசை அளபெடை:-
*****************************



      இன்னிசை அளபெடை என்பது, 
செய்யுளில் ஓசையோ அசையோ குறையாத போதும் அளபெடுப்பது ஆகும்.


எ-கா:-


" கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.".   (#15)


     இந்தக் குறளில், 'கெடுப்பதூஉம்' என்று
அளபெடுக்காமலே ,'விளமுன் நேர்' 
சரியாகவே அமையப்பெற்றுள்ளது.
'எடுப்பதூஉம் ' என்பதிலும் விளமுன் நேர்
அமையப்பெற்று வெண்பா இலக்கணம்
சரியாகவே உள்ளது. இருப்பினும் குறளின்
ஓசையை 'இனிமைப்படுத்துவதற்காகவே'
இவை 'காய்ச்' சீர்களாக மாற்றப்பெற்றுக்
குறளோசை, இன்னிசை பயப்பதாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
இதுவே இன்னிசை அளபெடையாகும்.



(3) சொல்லிசை அளபெடை:-
*******************************


       செய்யுளில் ஓசை குறையும்போதும்,
ஒரு பெயர்ச்சொல்லை வினையெச்சச்
சொல்லாக மாற்றுவதற்கு அளபெடுப்பது
சொல்லிசை அளபெடையாகும்.
எ-கா.


" உரனசைஇ உள்ளந் துணையாகச்
  சென்றார்;
  வரனசைஇ நின்று முளேன்.". (#1263)



        மேற்கண்ட குறளில், 'உரனைசை'
என்னும் சீரும், 'வரனசை' என்னும் சீரும்,
கருவிளச் சீர்களாக அமைந்து வெண்பா இலக்கணம் சரியாகத்தான் உள்ளன. ஆயினும், 'நசை' (விருப்பம்)
என்னும் பெயர்ச்சொற்களை,'நசைஇ' 
(விரும்பி) என வினையெச்சச் சொற்களாக
மாற்றுவதற்கென்றே இவ்விரண்டு சீர்களும் அளபெடெடுத்திருக்கின்றன.
இதைத்தான் சொல்லிசை அளபெடை என்கிறோம்.


     அளபெடுக்கும்போது, ஆ -வுக்கு 'அ'-வும்,
ஈ - க்கு 'இ' -யும், ஊ- வுக்கு ,'உ' -வும், 
ஏ- க்கு 'எ' - வும், ஐ- க்கு 'இ' -யும், ஓ- வுக்கு
'ஒ' -வும், ஔ- க்கு 'உ' -வும் அளபெடுக்கும்.


(4). ஒற்றளபெடை:- 
*********************        

       இஃது திருக்குறளில் இல்லாத வகையாகும்).



       செய்யுளில் ஓசை குறையும்பொழுது,
தனிக்குறிலை அல்லது குறிலிணையை
அடுத்துவரும் ஒற்றெழுத்து, அளபெடுத்து
ஒசையை நிறைவு செய்யும்.


எ-கா:-


" எங்ங் கிறைவனுளன் என்பாய்
   மனனேயான்,
   எங்ங் கெனத்திரிவா  ரில்."


     இக்குறள் வெண்பாவில், "எங்ங்கு
இறைவன்" என்பது, "எங்ங் கிறைவன்"
என்று ஆகி, ஓசையை நிறைந்துள்ளது.
இது, தனிக்குறிலை (எ) அடுத்துவந்த
ஒற்று (ங்) ஆனது , "ங்ங்" -என அளபெடுத்தது(அதாவது, ஒற்று இரட்டித்தது).


அடுத்து,


" இலங்ங்கு  வெண்பிறைசூ  டீசனடி
  யார்க்குக்
  கலங்ங்கு  நெஞ்சமிலை  காண்."


      இந்தக் குறள் வெண்பாவில்,
'இலங்ங்கு,  கலங்ங்கு' என்று, குறிலிணைக்கு (இல , கல) அடுத்து வந்த
ஒற்றாகிய 'ங்' - , 'ங்ங்' -என அளபெடுத்துள்ளதைக் காண்க.


      மேற்கண்ட சொல்லாகிய 'இலங்கு'
என்பதில் ஒற்று அளபெடுக்காமல் இருந்தால், புளிமா- ஆகும். புளிமாவானால்,
வெண்பா இலக்கணம் தவறாகும். அதனால்
'இலங்ங்கு' என்று ஒற்று அளபெடுத்துக்
கருவிளம் ஆகி, (இலங்/ங்கு - என்றாகி) வெண்பா இலக்கணத்தை
விளமுன் நேர் எனச் சரிசெய்துள்ளது.
'கலங்ங்கு' என்னும் சீரும் இதனையே
ஒக்கும். இங்கு, ஈற்றசையாகிய 'ங்கு'
என்பது இரு குறிலெழுத்துகள் போலக்
கருதுதல் வேண்டுமென்க.


திருக்குறளில் முதல் மூன்று வகையான
அளபெடைகளும் நிறைந்துள்ளன.


இசைநிறை அளபெடைகள் மொத்தம்
ஐம்பத்து நான்கு (54) உள்ளன.



ஓர் எடுத்துக்காட்டு:-


"கற்றதனா லாய பயனென்கொல் 
  வாலறிவ
  னற்றா டொழாஅ  ரெனின்."   (#02)


இவ்வாறான அளபெடைகள் அமையப்பெற்ற குறள்களின் எண்களைக் கீழ்க்காணவும்.


                 *************
02, 12, 14, 38, 46, 55, 238, 257, 347, 653, 702,
809, 824, 840, 848, 876, 921, 933, 1052, 1053,
1059, 1070, 1087, 1088, 1090, 1097, 1098,
1104, 1108, 1115, 1143, 1176, 1194, 1198,
1200, 1204, 1210, 1245, 1292, 1295, 1301,
1305, 1324.


                       **********


(2) இன்னிசை அளபெடைகள் மொத்தம்
      முப்பத்தாறு (36) ஆகும்.


எ-கா.


" கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்
   றாங்கே
  எடுப்பதூஉ  மெல்லா  மழை."  (#15)


இதுபோன்ற அளபெடைகள் அமையப்
பெற்றக் குறள்களின் எண்கள் வருமாறு:-


                     *************


15, 31, 32, 166, 227, 230, 422, 425, 460, 461,
544, 546, 599, 641, 644, 713, 797, 812, 816,
820, 830, 845, 913, 928, 929, 931, 938, 940, 
982, 1005, 1009, 1036, 1079, 1194, 1215, 
1292- (இக்குறளில் ,'செறாஅர்' -மட்டும்).


                     *************


(3) சொல்லிசை அளபெடைகள்:-
திருக்குறளில் காணப்படும் இவ்வகையான
அளபெடைகள் மொத்தம் ஆறு (6) மட்டுமே.


எ- கா:


"இன்சொலா  லீர மளைஇப் 
படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்." (#91)


இவ்வகையான அளபெடைகள் அமையப்
பெற்ற குறள்களின் எண்கள்:-


                  *************


91, 94, 182, 660, 1040, 1263.

அளபெடை குறள்கள். (இன்னிசை இசைநிறை)



திருக்குறளில் இன்னிசை அளபெடை (கருவிளம், கூவிளம் கொண்ட விளச் சீர்கள்):
------------------------------------------------------
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும்

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக்கடை

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின்

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல்

உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்

களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழத்தொறூஉம் காது அற்று உயிர்

குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை

இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ்

நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது

----------------


திருக்குறளில் இசைநிறை அளபெடை ( மா, விளச் சீர்கள்):
------------------------------------------------------


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தேறினும் தேறாவிடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு

வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்  
வீழப் படாஅர் எனின்

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பாய  தூஉம் மழை

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை

பரியது கூர் கோட்டதுஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர்

Sunday, April 25, 2021

திருவாரூர் முத்துசாமி ஐயர்

ஒரு ரூபாய் ஊழியர்

திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார். ஒரு நாள் காலையில், வீட்டில் உட்கார்ந்து கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சிலர் ஓடி வந்து,

“ஐயா, ஐயா, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்ததே அணை. அதை வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது! உடனே வந்து கவனிக்க ஏற்பாடு செய்ய வேணும்” என்று வேண்டினர்.

இதைக் கேட்டதும் தாசில்தார் ஒரு சேவகனை அழைத்து, “நீ உடனே போய்,அலுவலகத்தில் யாராவது குமாஸ்தா இருந்தால் கையோடு கூட்டிக் கொண்டு வா. உம். சீக்கிரம்” என்று உத்தரவிட்டார்.

சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் சென்றான். அப்போது அங்கு முத்துசாமி என்ற ஒரு சிறுவன் மட்டுமே இருந்தான். வேறு யாரும் இல்லை. சேவகன் அவனிடம் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு, “பெரியவர்கள் யாரும் வரவில்லையா?” என்று கேட்டான்.

“இல்லை. அதனால் என்ன? நான் வருகிறேன். வா. போகலாம்” என்று கூறித் துணிச்சலோடு தாசில்தாரிடம் வந்தான் முத்துசாமி.

தாசில்தார் முத்துசாமியை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பிறகு, சேவகனை நோக்கி,

“என்னடா இது, இந்தப் பொடியனை அழைத்து வந்திருக்கிறாயே! வேறு யாரும் இல்லையா?...” என்று சலிப்போடு கூறிவிட்டு, முத்துசாமியைப் பார்த்து, “சரி. சரி. ஏனப்பா,உனக்கு அந்த உடைப்பைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

“நீங்கள் உத்தரவு கொடுத்தால், உடனேயே நான் அங்கே போய், விவரம் அறிந்து வருகிறேன்” என்றான் முத்துசாமி.

“சரி, போய் வா” என்று அரை மனத்துடன் அவனை அனுப்பி வைத்தார் தாசில்தார்.

முத்துசாமி உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் கையில் ஒரு தாள் இருந்தது. அதைத் தாசில்தாரிடம் கொடுத்தான். அதை அவர் உற்றுப் பார்த்தார்

அதில், எவ்வளவு தூரம் அணை உடைந்திருக்கிறது. அணையைத் திரும்பக் கட்டுவதற்கு என்னென்ன சாமான்கள் வேண்டும். அந்தச் சாமான்கள் எங்கெங்கே கிடைக்கும். எவ்வளவு நாட்களாகும், எவ்வளவு ரூபாய் செலவாகும் என்ற விவரங்களெல்லாம் இருந்தன.

தாசில்தார் அதைப் பார்த்து வியப்படைந்தார். ஆனாலும், உடனே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமைக் குமாஸ்தாவிடம் அந்தத் தாளைக் கொடுத்து, “இந்தப்பையன் என்னென்னவோ இதில் எழுதிக் கொடுத்திருக்கிறான். நேராகப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். உடனே நீர் புறப்பட்டுச் சென்று, விவரம் அறிந்து வாரும்”என்றார்.

தலைமைக் குமாஸ்தா உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்றார். நிலைமையை நேரில்அறிந்தார். சிறுவன் முத்துசாமி எழுதிய விவரங்கள் நூற்றுக்கு நூறு சரி என்பதைஉணர்ந்தார். அப்படியே தாசில்தாரிடம் போய்ச் சொன்னார். அதைக் கேட்டு தாசில்தார் ஆச்சர்யம் அடைந்தார். முத்துசாமியை மிகவும் பாராட்டினார்.

அதே முத்துசாமி தாசில்தாரை மற்றொரு முறை வியப்பிலே ஆழ்த்தினான்.

ஒருநாள், பெரிய மிராசுதார் ஒருவர் தாசில்தாரிடம் வந்தார். “என்னுடைய நிலங்களுக்கு நான் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? தொகையைச் சொன்னால், உடனே கட்டிவிடுகிறேன்” என்றார்.

அந்த மிராசுதாருக்கு அந்தத் தாலுகாவில் பல இடங்களில் நிலம் இருந்தது. சுமார் இருபது கிராமங்களில் அவருக்கு நிலம் இருந்ததால் கணக்குகளைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.

குமாஸ்தாக்களில் ஒருவரைக் கூப்பிட்டுக் கணக்கைப் பார்க்கச் சொல்லலாம் என்று தாசில்தார் நினைத்தார். அப்போது, அருகிலே சிறுவன் முத்துசாமி நின்று கொண்டிருந்தான்.

அவனிடம், அந்த மிராசுதாரின் பெயரைச் சொல்லி, “இவருடைய வரிப் பாக்கி எவ்வளவு என்று கேட்டுவா” என்றார் தாசில்தார்.

ஆனால், முத்துசாமி யாரிடமும் போய்க் கேட்கவுமில்லை; கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவுமில்லை. நின்ற இடத்தில் நின்று கொண்டே, ‘இவர் இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று ஏதோ ஒரு தொகையைச் சொன்னான். அதைக் கேட்ட தாசில்தார்,

“என்னடா இது! வாயில் வந்த ஒரு தொகையைச் சொல்கிறாயே! சம்பந்தப்பட்ட கணக்குப் பிள்ளைகளைக் கூப்பிடு. கணக்கைச் சரியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

தாசில்தார் விருப்பப்படியே கணக்குப் பிள்ளைகளை அழைத்து வந்தான் முத்துசாமி.அவர்கள் கணக்குப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, ஒரு காகிதத்தில் தொகையைக் குறித்துக் கொண்டார்கள்.

பிறகு எல்லாவற்றையும் கூட்டிப் போட்டு, மொத்தத் தொகையைச் சொன்னார்கள். அவர்கள்சொன்ன தொகையும், முத்துசாமி சொன்ன தொகையும், ஒன்றாகவே இருந்தன. தம்படிகூடவித்தியாசமில்லை! இதைக் கண்டு தாசில்தார் மிகுந்த வியப்படைந்தார். அவர் மட்டும் தானா? மிராசுதாரர், கணக்குப் பிள்ளைகள் எல்லாருமே அளவில்லாத

ஆச்சரியமடைந்தார்கள்.

முத்துசாமியிடம் இப்படிப்பட்ட திறமையும், ஞாபக சக்தியும் இருப்பதைக் கண்ட தாசில்தார் வியப்படைந்ததோடு நிற்கவில்லை. அன்றே முத்துசாமியை அழைத்து,

“முத்துசாமி, இன்று முதல் உன் சம்பளத்தை மூன்று மடங்கு ஆக்கி விட்டேன்” என்று கூறினார்.

மூன்று மடங்கு! என்றால் பிரமித்துப் போய் விடாதீரிகள் அந்த மூன்று மடங்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.மூன்று ரூபாய்தான் .

ஆம் அப்படியானால் அவர் வாங்கிக் கொண்டிருந்த மாத சம்பளம் ஒரு ரூபாய்.

அன்று ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவி ஆளாக இருந்த அந்த ஒரு ரூபாய் ஊழியர் யார் தெரியுமா?

பிற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே வகித்து வந்த

#நீதிபதிபதவியைபெற்றமுதல் #இந்தியர்சர். #டி. #முத்துசாமி அய்யர்தான் அந்த ஒரு ரூபாய் ஊழியர்.

1877 இல் சென்னை உயர்நீதிமன்ற

முதல் இந்திய நீதிபதி பதவியை வகித்தவர்.

1893 இல் சென்னைஉயர்நீதிமன்ற

தலைமை நீதிபதியாகவும் இருந்தவர்.

நன்றி: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பெரியோர் வாழ்விலே என்ற நூலில் இருந்து

(#உபயம் #டி.#என். #முரளீதரன்-

#மூங்கில்காற்று)

Sunday, April 18, 2021

வாசிப்பு

புத்தகம் வாசிப்பது பற்றி 
புகழ் பெற்ற மேதைகள் 
சொன்ன சில சுவாரசியமான தகவல்கள் !!!
.
► ''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் 
பெட்ரண்ட் ரஸல்.

► மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

► 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.


► பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.


► ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.
.

► 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

Thursday, April 15, 2021

அருவி

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
விக்ரமாதித்யன்

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk