1. குலம் ஒன்று:
மனித குலம் ஒன்று ...
2. இனம் இரண்டு:
ஆண்
மற்றும்
பெண் என இனம் இரண்டு
3. தமிழ் மூன்று:
இயல்,
இசை ,
நாடகம் என தமிழ் மூன்று
4. மறை நான்கு:
மறை என்பது வேதங்கள் ஆகும்.
ரிக் வேதம்,
யசுர் வேதம்,
சாம வேதம் ,
அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு
5. புலன் ஐந்து:
கண்,
காது,
நாக்கு,
தோல் ,
மூக்கு என புலன் ஐந்து
6. சுவை ஆறு:
துவர்ப்பு,
இனிப்பு,
புளிப்பு,
கார்ப்பு,
கசப்பு ,
உவர்ப்பு என சுவை ஆறு
7. குணம் ஏழு:
குண்டலினி யோகம் எனப்படும் மூலாதாரம்,
சுவாதிஷ்டானம்,
மணிப்பூரகம்,
அனாகதம்,
விசுக்தி ,
ஆக்கினை ,
துரியம் என குணம் ஏழு
8. திக்கு எட்டு:
குபேரன் (வடக்கு),
யமன் (தெற்கு),
இந்திரன் (கிழக்கு),
வருணன் (மேற்கு),
ஈசானன் (வடகிழக்கு),
அக்னி (தென்கிழக்கு),
வாயு (வடமேற்கு) ,
நிரிருதி (தென்மேற்கு) என திக்கு எட்டு
9. ரசம் ஒன்பது:
நகை,
அழுகை,
இளிவரல்,
மருட்கை,
அச்சம்,
வெகுளி,
பெருமிதம்,
உவகை ,
அமைதி என ரசம் ஒன்பது.
Sankaran Nsk
No comments:
Post a Comment