Wednesday, December 11, 2019

நெற்பொரி....


பத்தாம் வகுப்பு மாணவர்களிடம்
திருக்கார்த்திகையை முன்னிட்டு
வகுப்பறையில் ஊடாடிக்கொண்டிருந்தபோது..
"  #அவல்பொரி_யார்வீட்ல..
#நெல்பொரி_யார்_வீட்ல? "என்றேன்.

" #நெல்லுப்பொரியா...
#அப்படினா " என்றார்கள்.

#தமிழகத்தின்நெற்களஞ்சியத்திற்கு இப்படி  ஒரு சோதனை.

ஆமாம் ,
அவர்களுக்கு
#நெல்லே தெரியாதே.
அரிசி மட்டும்தானே தெரியும்.
ஆயிரமாயிரம் நெல் வகைப்பாடுகள் இருந்த ஊரில் இன்று அவர்களுக்குத் தெரிவதுஒன்றே ஒன்றுதான்...
அதுவும்
#கர்நாடகப்பொன்னி...

அதன்விளைவே இப்பதிவு.

#நெற்பொரிசெய்வது_எப்படி?

#நெற்பொரி என்பது
மோட்டாரக நெல்லை ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு அதனை எட்டுமணி நேரம் காய விட வேண்டும். அதன் பின் நெல்லை அடுப்பில் காயும் சட்டியில் அடுமணலுடன் சேர்த்து கிளர வேண்டும். ஒரு நேரத்தில் நெல் வெடித்து நன்றாக அரிசி உப்பும் .

பிறகு அதனைப் புடைத்து உமியை நீக்கி விட்டு நெற்பொரியைப் பிரித்து எடுக்கலாம்.

ஒருபடி அரிசி கிடைக்கக்கூடிய
நெல்லில் சுமார் 8 படி பொரியைத்தயார் செய்யலாம்.

#அரிசி_பொரி என்பது புழுங்கலரிசையைத் தண்ணீரில் உப்பு சேர்த்தும், சேர்க்காமலும் ஊறவைத்து அடுமணலுடன் சூடாக்கி பொறித்து எடுப்பது. இது ஒரு அரிசியை விட 8 மடங்கு பெரியதாய் உப்பி வரும்.

நெற்பொரியைக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்குக் கஞ்சியாகச் செய்து கொடுக்கலாம். மேலும்
மோர், தயிர் வெல்லம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து சிறு உணவாக உட்கொள்ளலாம்.

பொரிஉருண்டையும் செய்யலாம்.

அதுசரி உங்களுக்கு...
#சோளப்பொரி தெரியுமா?

உங்களுக்கே #பாப்கார்ன் தானே தெரியும்

Wednesday, September 11, 2019

குறளில் தெய்வம்

கடவுள் என்னும் சொல் திருக்குறளில் இல்லை. தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது.

தெய்வம் என்பது ஊழ்[10]இது நம் உடலோடும் உயிரோடும் ஊழ்த்துக் (பூத்துக்) [11] கிடப்பது.தெய்வம் என்பது ஊழ். தன் குடிப்பெருமை மேலோங்கப் பாடுபடும் ஒருவனுக்கு உதவ ஊழ்த்தெய்வம் வரிந்துகட்டிக்கொண்டு வந்து துணைநிற்கும்.[12]வான் உறையும் தெய்வம்: தெய்வத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று 'வான் உறையும் தெய்வம்'. இதனை யாரும் கண்டதில்லை. வையத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவர் இந்த வான்தெய்வத்துக்கு ஒப்பாக வைத்துத் தொழப்படுவர்.[13]எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல் பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்பவனைத் தெய்வத்துக்கு ஒப்பாக எண்ணவேண்டும்.[14]தெய்வம் எனப் போற்றப்படுபவர் துறவிகள். இல்லறத்தான் பேணவேண்டிய புலத்துறைக் களங்கள் ஐந்து. அவை தென்புலத்தார் எனப்படும் வயது முதிர்ந்தோர், தெய்வம் எனப்படும் துறவிகள், விருந்தினர், ஒருவனைச் சார்ந்து வாழும் ஒக்கல், தான் - என்னும் களங்கள். [15]கணவன் தெய்வத்தைப் பேணவேண்டும். மனைவி தொழமாட்டாள். காரணம் கணவனே அவளுக்குத் தெய்வம்.[16]

Sunday, January 20, 2019

இசை

https://bandura.ukrzen.in.ua/#lvivbandurfest
உங்கள் போனே வாத்தியமாகும் அதிசயம்  மேலேயுள்ள லிங்கைத்தொட்டால்
ஒரு
வீணை வாத்தியத்தின் படம் வரும்  
இந்த வீணை வாத்தியத்தை நீங்களே இசைக்கலாம். வீணையின் கம்பிகளைத் தொட்டுத்தான் பாருங்களேன்.
ஆச்சரியம்.
அற்புதம்,...
இசை,.
அருமை,...
👌👌👌👌👌
🌸🌸🌸🌸🌸🌸🌸

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk