பயம் என்றால் என்ன?
நள்ளிரவு நேரம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அம்மா,
தன்பக்கத்தில் படுத்திருந்த மகன் இல்லாததைக் கண்டு துணுக்குற்றாள்.
எங்கெங்கோ இடங்களில் தேடி இறுதியில் அவ்வூரின் குளக்கரையில் மகனைக் கண்டாள்.
“இங்கே தனியாக நீ என்ன தம்பி செய்து கொண்டிருக்கிறாய்?” என்றாள் திகைப்போடு.
“நிலவொளியிலே அழகியமீன்கள்
நீரில் துள்ளிக்குதித்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் மகன்.
“உனக்குப் தனியாக இருப்பது பயமாக இல்லையா?”
என்ற அம்மாவின் கேள்விக்கு,
“பயமா? பயமென்றால் என்ன அம்மா?”
என்று முகம்சுருக்கித்
திருப்பிக் கேட்டான்,
எட்டு வயதேநிறைந்தஅந்தச் சிறுவன்.
அச்சிறுவன்தான் பிற்காலத்தில் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட மாவீரன் நெப்போலியன்.
No comments:
Post a Comment