Friday, March 24, 2017

சிக்கல்களைக் கையாளுதல்

        மனிதர்கள் தினந்தோறும் வெவ்வேறுவிதமான அனுபவங்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். ஒருவரின் அனுபவம் மற்றவருக்கு வழிகாட்டுவதற்கு பயன்படுமேயன்றி அந்த அனுபவத்தின் நிகழ்வுகளோ தீர்வோ மற்றவர்களின் அனுபவத்தோடு ஒத்துப்போவதற்கு பத்துகோடியில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது.
         
                   வாழ்வியல்சிக்கல்களைச்
சந்திக்கும்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் பரபரப்பாக முடிவுகளை எடுப்பதும்
உணர்ச்சியின்பிடியிலும் கொந்தளிப்பான மனநிலையிலும்
பரபரவென்று முடிவுகளை எடுக்கும்போதும் புதியசிக்கல்களுக்கு விதை விழுந்து விருட்சமாக வேரூன்றி நின்றுவிடும்.ஆகவே எந்தச்சூழ்நிலையிலும் விவேகமற்ற பதற்றத்தில் மேற்கொள்ளப்படுகிறமுடிவுகள் நல்லபலன்களைத்தருவதில்லை என்பதை உணரவேண்டும்.
பிரச்சினைகளை அவை மேலும் சிக்கல்களுக்கு உள்ளாக்குவதோடு பொருளாதார ,உறவுகளில் இழப்புகளுக்கும் வழிவகுத்துவிடும்.
      பிரச்சினைகளை அணுகும்போது உணர்ச்சிகளுக்கு இடம்தராது அறிவினடிப்படையில் நிதானமாகவும் தீர்க்கமாகவும் எதிர்கால பின்விளைவுகளைக் கருத்தில்கொண்டும் முடிவுகள் எடுங்கள். 
                  
 உங்களுடைய முடிவுகள் யாரையும் காயப்படுத்தாதவகையிலும் ,நேர்வழியிலும், எவருக்கும் பாதிப்பு எற்படாதவகையிலும்,கேள்விகளுக்குவாய்ப்பளிக்காதவகையிலும்,வெளிப்படைத்தன்மையுடையதாகவும் இருக்கட்டும்.
                            முடிவுகள்எடுக்கும்போது பதற்றநிலையையும் உணர்ச்சிகளுக்கு ஆட்படாதும் இருப்பது அவசியம்.
உணர்ச்சிகளுக்கும்பதற்றத்துக்கும் இடையில் எடுக்கப்படுகிற முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
                  இலாகவமாகவும் எளிதாகவும்,அணுகவேண்டியவைகளைஅறிவின்துணையோடும்,
அறிவிற்சிறந்தமூத்தோரின்
வழிகாட்டுதலின்படியும்,அன்பு சார்ந்தும் அணுகுங்கள்.

              நான் பதவியில் உயர்ந்தவன்
வயதில் மூத்தவன் என் முடிவுகளே சிறப்பானவை என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்.

                    உங்கள்  அன்புக்குரிய குழந்தைகளிடமிருந்துக்கூட
 உங்கள் சிக்கலுக்கு உயரிய தீர்வுகள் கிடைக்கலாம்.

                          திறந்தமனதோடும்
பெருந்தன்மையோடும் பிரச்சினைகளை அணுகும்போது உங்கள் எதிராளிகளுக்குக்கூட உங்கள்மீது  அளவுகடந்த  அன்பும்   மட்டற்ற மரியாதையும்  நற்மதிப்பும் உண்டாகும் . இது நல்ல சூழலை உருவாக்கும்.
                                   
                           முரண்டுபிடித்துக் கொண்டு பிரச்சினைகளை அணுகினால் இரண்டு பூனைகள் ஆப்பத்தை பங்கிட்டுக்கொள்ள குரங்கிடம் போய் ஏமாந்து நின்ற கதை தான் நிகழும்  . இழப்புகளையும்சந்திக்க
வேண்டிவரும்.
           உணர்ச்சிவசப்படாது அறவழியில் விவேகத்தோடு பிரச்சினைகளை அணுகுங்கள்.

                எதிராளியை.  திகைக்க
வைக்கவோ,திக்குமுக்காடவைக்க
வேண்டுமென்றோ,விளம்பரத்திற்காகவோ ,பரபரப்பிற்காகவோ வாழ்க்கையில் பிரச்சினைகளை அணுகாதீர்கள். 




விதை :
எந்த விஷயத்தையும், பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள்.

உறவைமேம்படுத்தும் சிந்தனைத்துளிகள். - துளி3

SankaranNsk

Wednesday, March 22, 2017

சொற்களின்ஆற்றல்

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் தனக்கான தனித்தனி விருப்புவெறுப்புக்கான
இயல்பூக்கங்களைக்கொண்டவர்கள்.மாற்றாரின் பேச்சுக்கும் கருத்திற்கும் உடன்படுதலைச் சந்தர்ப்பங்களும் பிற புறச்சமூகக்காரணிகளும் ஏற்படுத்துமேயன்றி
எந்த இயற்கை,அறிவியல் விதிகளினடிப்படையிலும்
மற்றவர்களோடு ஒத்துப்போகவேண்டிய
அவசியங்கள் இல்லை.
இதைஉணராது
தான் என்ற உணர்வால் உந்தப்படுகிற மனிதன் தன்கருத்துகளேசரி
என்றும், தன் சொற்களே வலிமைவாய்ந்தன என்றும்நம்புகிறான்.
நம்பவதோடு அதனை எதிராளிகளும் ஏற்கவேண்டுமென முயல்கிறான். இது வன்புணர்ச்சிக்கு ஒப்பானது.
இயல்பாகவே தான் என்ற உணர்வு ஓங்கிக்கிடக்கிற தன்னிலிருந்து மாறுபட்ட எதிர்மனிதன் இத்தகு சூழலில் எதிர்வினையாற்ற உந்தப்படுகிறான்.
அங்கே முரண்பாடுகள் உண்டாகின்றன.எதிராளியின் கருத்தும் சொல்லும் சரியாகவே இருந்தாலும் அதற்கு உடன்பட மனம் ஒத்துழைப்பதில்லை.இதுவே மனிதர்கள் சிக்கலில் சிக்கிக்கொள்வதற்குப் பெரும்பாலும் துணைநிற்கிறது.காரணமாகிறது.
பெற்றோர்,வாழ்க்கைத்துணை,
குழந்தைகள்,உற்றார்,உறவினர்,நண்பர் என அனைவரும் தன் சொல்லடிப்படையிலும்
கருத்தினடிப்படையிலும்
வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.அவரவர்க்கென்ற தனித்த விருப்புவெறுப்புகளுண்டு என்பதை உணர்தல் அவசியம்.
தன்கருத்தையே முன்னிருத்தி வாழ்ந்து அடுத்த தலைமுறையையே சிக்கலுக்குள் தள்ளிய வரலாற்றுச்சான்றுகள் உலகில்
இனம் மொழி பண்பாடு கடந்து ஏராளாமாக நிரம்பிக்கிடப்பதைக் காணமுடிகிறது.
உடல்வளம் பெரும்பாலும்கெட்டுப்
போகக்காரணமாகவுள்ள ஐம்புலன்களில் ஒன்றான வாயே மனிதவாழ்வில்  மனவளச்சிக்கல்களுக்கும் வாழ்வியல்சிக்கல்களுக்கும்
காரணமாக அமைகிறது.
நுணலும் தன்வாயால் கெடும் என்னும் தமிழகமூத்தோர்வாக்கும்
Think before you  speak என்னும் மேற்கத்திய வாக்கிலுமுள்ள அடிப்படைவாதம் இங்கு சிந்திக்கத்தக்கது.
.
நன்றி.
விதை :
அர்த்தமில்லாமிலும்,
தேவையில்லாமிலும்
பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். (Loose Talks) - 

Tuesday, March 21, 2017

நானே பெரியவன்

மனிதர்கள் இயல்பு தான் என்ற
எண்ணத்தோடு வாழ்வது.

இந்த தான் என்ற தன்முனைப்பு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதே.
அது ஒரு எல்லைவரை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எதிராளியின்
தான் என்ற
உணர்வுகளைக்
காயப்படுத்தாதவரை,
மற்றவரின்
தான் என்ற அகந்தையின்மீது தாக்குதல் தொடுக்காதவரை அனுமதிக்கப்படுகிறது.
ஆகவே
தான் என்ற உணர்வைக்கட்டுக்கொள் கொண்டு
பிறரை இம்சிக்காது
வாழ்தலே
வாழ்வின் வெற்றி.
ஆணோ ,பெண்ணோ இருவரும்
ஒருவர்மீது ஒருவர்
தான் என்ற
தன்முனைப்பை செலுத்தமுயல்கின்றனர்.

தன்முனைப்பின் அடிப்படை அதிகாரம் செலுத்துதலும்,
எதிராளியை தன்கட்டுப்பாட்டுக்குள் கொணர்தலும்.
அன்புசெலுத்துதலன்று.

அன்பை மறுத்து செலுத்தப்படும் அதிகாரமானது
வெறுப்பை
உமிழக்கூடியது.

விதை :
                நானே பெரியவன்,
நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

உறவுகளைமேம்படுத்தும் சிந்தனைத்துளிகள். - துளி 1.

SankaranNsk

Monday, March 20, 2017

மருத்துவரும்பெண்ணும்

சுட்டது?!!

இது டாக்டர் ஹரி எழுதினதுன்னு நினைக்கிறேன்.. Epic.😂😂😂😂

Lady : மே ஐ கமின் டாக்டர்

Dr : வந்துட்டீங்களே உட்காருங்க!

Lady : தேங்க் யூ!

Dr : சொல்லுங்க!

Lady : என்னது?

Dr : என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!

Lady : ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

Lady : மஞ்சளா!

Dr : அதான் மொதல்லயே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!
பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!

Lady : அதுதான் சொன்னேனே, மஞ்சளா!

Dr : ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?

Lady : இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!

Dr : ஓ! சாரி! சாப்ட்டானா?

Lady : இல்லடாக்டர், நல்லவேளை, அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா!
இப்படிப் படுத்தறீங்களே!

Dr : உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!

Dr: என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !

lady : சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!

Dr : வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!
சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!

Dr : ஓ சாரி!

Lady : அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?

Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா ...

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!
பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?

சரி, எத்தனை தடவை போனான்?

Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல!
லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!

நாலுதடவை!

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!

Dr : அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா!

(சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!)

Dr : இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!

இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!

அப்புறம் இந்த பௌடர,

Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க!

சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?

சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!

ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!

Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?

Dr : அம்மா பரதேவதே,

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்!

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்ச...?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!

Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!

Lady : டாக்டர், டயட் சொல்லலியே!

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ!

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!

Dr : தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?

Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட் அப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!

Lady : அப்போ செட் அப்புதான்!
நான் வரேன் டாக்டர்!

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)

Wednesday, March 15, 2017

தேடலே வாழ்க்கை!

நண்பர்
வாழ்க்கை எது ?
என்று கேட்டிருந்தார்.

தேடுதலே வாழ்க்கை.

நன்மைக்கும்
தீமைக்குமிடையேயான வலியபோராட்டத்தில்
எது நன்மை,எது தீமை என்பதனைத்தேடி
கண்டறிதலும்,
தெளிதலுமே வாழ்க்கை.

நன்மை எனத்தேர்ந்தது தீமையாவதும்,

தீமை எனவிலக்கியது
நன்மையாவதும்
சுயம் காரணமாகவே.

சுயம் கடந்து நிற்றலே நன்மை என்பதை  உணர்வதற்கு
பாரதியின்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்.
.

தேடலே வாழ்க்கை.
தேர்தலே வாழ்க்கை.
தெளிதலே வாழ்க்கை.

SankaranNsk

Monday, March 06, 2017

IAS தேர்வு - ஐயமும் தெளிவும்

IAS தேர்வு  -  ஓர் அறிமுகம்.
**********************************

IAS மற்றும் IPS உள்ளிட்ட
24 பணிகளுக்காக
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே
(CIVIL SERVICE EXAM)
மிகவும் பிரபலமாக
#IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?

குறைந்தபட்ச வயது :

21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது :

பொதுப்பிரிவினர்
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?

பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited).

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?

சமூகம் மற்றும் நாட்டிற்கு
நேரடியாக சேவை செய்யும்
வாய்ப்பு
ஆளுமை
அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?

இல்லை.
அடிப்படை ஆங்கில அறிவு
மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?

முடியும்.
IAS முதன்மைத் தேர்வை
தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு
20 மணி நேரம் வீதம்
365 நாட்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.
ஒரு நாளைக்கு
4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
என்னால் முடியுமா ?

கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள்
2000 முதல் 3000 மட்டுமே.
உண்மையான போட்டியாளர்கள்
என்பவர்கள்
சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?

தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட
பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?

முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?

IAS தேர்வு என்பது
பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித்தேர்வு.
ஆகவே
இன்றிலிருந்தே
தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?

முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?

இல்லை.
அப்படி எதுவும் இல்லை..
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்

வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்

சரியான திட்டமிடல்

திட்டமிட்டதைத்தொடர்ச்சியாக செயல்படுத்துதல்

மாதிரித் தேர்வுகள் எழுதுதல்

சரியான வழிகாட்டல்

இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்

இவை அனைத்தும்
இருந்தால் நீங்களும்
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..!

தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நம் இளைஞர்களை
நம் வீட்டுக்குழந்தைகளை
நம் மாணவச்செல்வங்களை
உற்சாகப் படுத்துங்கள்.

நமது ஊரில்
IAS. IPS. போன்ற வேலைகளுக்கு
நமது இளையதலைமுறையை ஆர்வம் கொள்ளச்செய்வோம்.

மாற்றத்துக்கு
வித்திடுவோம்.

நன்றி.

SankaranNsk

Friday, March 03, 2017

பயமறியான்.


பயம் என்றால் என்ன?

நள்ளிரவு நேரம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அம்மா,

தன்பக்கத்தில் படுத்திருந்த  மகன் இல்லாததைக் கண்டு துணுக்குற்றாள்.

எங்கெங்கோ இடங்களில் தேடி இறுதியில் அவ்வூரின் குளக்கரையில் மகனைக் கண்டாள்.

“இங்கே தனியாக நீ என்ன தம்பி செய்து கொண்டிருக்கிறாய்?” என்றாள் திகைப்போடு.

“நிலவொளியிலே அழகியமீன்கள்
நீரில் துள்ளிக்குதித்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் மகன்.

“உனக்குப் தனியாக இருப்பது பயமாக இல்லையா?”

என்ற அம்மாவின் கேள்விக்கு,

“பயமா? பயமென்றால் என்ன அம்மா?”

என்று முகம்சுருக்கித்
திருப்பிக் கேட்டான்,
எட்டு வயதேநிறைந்தஅந்தச் சிறுவன்.

அச்சிறுவன்தான் பிற்காலத்தில் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட                மாவீரன் நெப்போலியன்.

Wednesday, March 01, 2017

யார் பெரியார்?

பெரிசா என்ன
பன்னிட்டாரு பெரியார்...?
……………………………………

என்னை என் நண்பர்
ஒருவர் கேட்டார் .

பதில் சொல்வது
பெரியார் பேரனாகிய என்
கடமையல்லவா?

நான்: சமீபத்தில் விமானவிபத்தில்
இறந்த ஆந்திர முதல்வர் பேரு ?

நண்பர் :  இது என்னகேள்வி சிறு பிள்ளைக்குக் கூடதெரியுமே ராஜசேகர ரெட்டி .

நான்:  சரி ஆந்திராவின் முன்னாள்
முதல்வர் பேரு என்ன?

நண்பர் : சந்திரபாபு நாயுடு.

நான்: சரி,நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு?

நண்பர்  (சற்றுஎரிச்சலோடு)எடப்பாடி
அதுக்குமுன்னாடி பன்னீர்செல்வம்

நான்:  சரி, முன்னால்முதல்வர் பேரு என்ன ?

நண்பர்:  ஜெயலலிதா .

நான்:    அவருக்கு முன் ?

நண்பர் : கருணாநிதி.

நான்: கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்
ஜாதி உண்டு தான் என்றாலும் அந்த
பின் இணைப்பு இங்கு இல்லை
ஆந்திராவில் இருக்கு .அந்த சாதியைப்பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் பெரியார்.
அந்த அளவில் அவர்பெரியார்.சரிதானே ?

தமிழ்நாட்டில் இன்றும்
முனுசாமி
முனுசாமி ரெட்டியாக இல்லாமல்
முனுசாமியாகவும்,

முத்துபாண்டி
முத்து பாண்டி தேவராக இல்லாமல்
முதுபாண்டியாகவும் இருக்க
பெரியார் தான் காரணம் என்றால் அது
மிகை அல்ல……

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk