Thursday, April 28, 2016

முதல்வர்

முதல்வர்.

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது
பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.

( , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" )

உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.
பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன?
என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா ,
"இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,
வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

Pin drop silence....
அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள்
அனைவரும் தலைகவிழ்ந்தனர்.
இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும்
தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ".
.


மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள்.
நாம் அமைதி காப்போம்" இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!
இந்த பெருந்தன்மை எத்தனை
அரசியல்வாதிகளுக்கு வரும்?


நெல்லிக்கனி


அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.



நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து.
பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது.
 வளர்க்கச் செய்வது.
வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும்.
 பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.



வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப்  நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில்
 ஊறுகாய்,
துவையல்,
பச்சடியில் முக்கிய அங்கம் வகிப்பது.



இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.





ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.



நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட

சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)

பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.

பேச்சுஉளவியல்.!


பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!
****************************************************
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
.
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேறி என நினைக்கக்கூடும்.
.
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளைச் சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதைத்தவிர்க்கவும். அது உங்களைப்பயந்தவராக காட்டக்கூடும்.
.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதைக்கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு இதமான குரலில் பேசவும்.
.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்...
.
நன்றி.
பகிரவும்.

பாரதியும்....வெற்றிச்சிந்தனையும்.....


வெற்றி முழக்கம்.
(போட்டிகளுக்குச் செல்லுகையில் இதைச் சொல்லிக் கொண்டே போகவேண்டும்):
“ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வமதேனும்
சாரும் மானுடம் ஆயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறுமாறே
நல்ல சிந்தனை
(கீழ்கண்ட இந்தப் பாடலைத்தினமும் காலையில் சொல்லுங்கள்; நல்ல எண்ணங்கள் பெருகும்):
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்
ஒளிபடைத்த கண்கள்
(கண்ணாடிக்கு முன் உங்கள் உருவத்தைப் பார்த்தவாறே சொல்ல வேண்டிய பாடல்):
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா
சிறுவர்களுக்கு சொல்லித் தரவேண்டியது
துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும்போக்கிவிடும் பாப்பா!
பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
மனக் கஷ்டம் நீங்க
(மனதில் கஷடம் ஏற்பட்டால் படிக்க வேண்டிய பாரதி பாடல்)
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.
இறைவா ! எனக்கு நீ தர வேண்டியது
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்கவேண்டும்
துணை என்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்வழி சேர்ப்பித்துக் காக்கவேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நன்றே!
அச்சமில்லை
(பயம் நீங்க பின்வரும் பாடலைப் படியுங்கள்)
‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று இடி முழக்கம் செய்தார் அப்பர் பெருமான். ‘நாள் என் செய்யும் வினை தான்’ என் செய்யும் என்று முழங்கினார் அருணகிரிநாதர். ‘ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன் வியாழன்,வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’ என்று கோளறு பதிகம் பாடினார் சம்பந்தர்.
பாரதி சொல்கிறான்:
அச்சமில்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்”
“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமுண்டோடா? – மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”
.

பாரதி வாழ்க ! தமிழ் வெல்க !!

சிரிப்பும்....சிந்தனைகளும்.....

.சிரிப்பதால் கிடைக்கும் பலன்?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
"நமது நுரையீரலில் இருக்கும் காற்றறைகளில் 6.8.,
லிட்டர் காற்று நிரம்பி இருக்கிறது. நாம் சாதாரணமாக சுவாசிக்கும்போது
0.8 லிட்டர் அசுத்த காற்று (கார்பன்டை ஆக்ஸைடு) வெளியேறி அதே அளவில் ஆக்ஸிஜன் உட்புகும். ஆனால்
நாம் வாய் விட்டுச் சிரிக்கும் போதோ 4 லிட்டருக்கும் அதிகமான அசுத்த காற்று வெளியேறி அதிகமாக ஆக்ஸிஜன் உள்நுழையும்.
அதன் மூலம் அதிக அளவு பிராணவாயு ரத்தத்தில் கலக்கும். அதன் காரணமாக அனைத்து செல்களும்
புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
அந்த அளவுக்கு,
சிரிக்கும்போது உயிர்செல்களின் அடிப்படை செயல்பாடு மாறிவிடுகிறது.
ஆக்ஸிஜன் குறைவாகும்போது
உடல் சோர்வாக காணப்படும்.
அசுத்த காற்று அதிகமாக தங்குவதுதான் வியாதிகள் உருவாவதற்குத் தொடக்கமாக அமைந்து விடுகிறது.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் நெருங்காது.
மேலும் சிரிக்கும்போது
என்டோபின்
என்ற ஹார்மோன் சுரக்கிறது.
அது பயம்,
மன அழுத்தத்தைப்போக்கி
மனதைச் சாந்தப்படுத்தும்.
.
நன்றி..
சிலர் மற்றவர்கள் முன்பு சிரிக்கலாமா? அதனால் தனது அந்தஸ்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடாதா? என்று நினைக்கிறார்கள். சிரிப்பை அடக்கி வைக்கக்கூடாது. அப்படி செய்வது மன அழுத்தம் ஏற்பட காரணமாகிவிடும். சிரித்து மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். வெற்றியாளர்கள், சாதனை படைத்தவர்கள், பிரபலமானவர்களிடம் நகைச்சுவை உணர்வும் இருக்கும். மனம் விட்டு சிரிக்கும்போது உள் உறுப்புகள் அனைத்தும் உற்சாகமாக இயங்கி ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையை உற்சாகமாக எடுத்துக்கொள்ளும் மனம் பக்குவம் ஏற்படும். அனுசரித்து போகும் தன்மை அதிகரிக்கும். பிரச்சினைகளை எளிதாக கையாளும் தைரியம் பிறக்கும்."

அறிவுரைக்கான தகுதி.....


அறிவுரைக்கான தகுதி  .


ஒரு பெண் தனது குழந்தையினால்
மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன்
இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும்
சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில்
குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும்
சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை
கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.

அவள் ஒரு சூஃபி ஞானியிடம்
எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு
அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால்
இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள்.

அதனால் அவள் அந்த குழந்தையை அந்த
ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை.
நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக
பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன்
யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது
ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க
முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு
விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால்
நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள்
மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்.

அந்த ஞானி குழந்தையை பார்த்தார்.
அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது
நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு
வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு
சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற
முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார்.

அந்த பெண்மணியால் நம்பவே முடிய
வில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான்.
அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து
சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான
முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன
சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான்.

குழந்தையின் முன் தனது தவறை
ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால்
இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான்
தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான்
வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது
உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும்
வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும்.
என்றார்.

அந்த தாய் மிகவும்
அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க
முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு
எந்த இடமும் இல்லை.

இரண்டு வாரங்கள் சென்றபின்
அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால்
இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க
முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என
உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ
நினைக்கிறாயா – எனக்கு நீ  அனுமதியளித்தால்
என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார்.

அந்த பையன், எதுவும் கூற வேண்டிய
தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற
ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல்
இருப்பது- தானே அப்படி இருப்பது – நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான்
உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல்
நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான்.


  1. THE GREAT ZEN MASTER TA HUI  -  CHA # 4

வணக்கமும்...பழம்பாடலும்....

வணக்கம்.
.

ஏட்டில் படித்ததோடு
இருந்துவிடாதே - நீ
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே!

நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை
மீறக்கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது!

மாற்றார் கைப்பொருளை நம்பி
வாழக்கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன்
சேரக்கூடாது!

துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்!
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்!

வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான் முகட்டைத்
தொட்டிட வேண்டும்!

வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல்
விளங்கிட வேண்டும்!

பெற்ற தாயின் புகழும், நீ பிறந்த
மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வாழ்ந்திட வேண்டும்!
.
இன்று எழுதப்படும் பாடல்களின் நிலையே வேறு..
காலமாற்றம் கருத்திற்கொள்க...

Friday, April 22, 2016

யார் குரு?



பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!
************************
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
.
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேறி என நினைக்கக்கூடும்.
.
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளைச் சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதைத்தவிர்க்கவும். அது உங்களைப்பயந்தவராக காட்டக்கூடும்.
.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதைக்கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு இதமான குரலில் பேசவும்.
.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்...
.
நன்றி.

நரியா? புலியா?


சூபி சொன்ன கதை.



ஒரு மனிதன்
காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தான்.
அங்கே ஒதுக்குப்புறத்தில் ஒரு நரியைப்பார்த்தான்.
அதற்கு இரண்டு கால்கள் இல்லை.
இது எப்படி உயிர் வாழ்கிறது என்று அதிசயித்தான்.
அப்போது இரையை வாயில் கவ்வியபடி ஒரு புலி வந்தது.
மனிதன் பதுங்கிக்கொண்டான்.
புலி இரையைக்கீழே போட்டுவிட்டு
வயிறார சாப்பிட்டுவிட்டு
மீதியை
 நரிக்கு விட்டுவிட்டுப் போய்விட்டது.
நரி இந்த மீதியை உண்டு பசியாறியது.
இதைப் பார்த்த மனிதன்
“எனக்கு பெரிய உண்மை புரிந்துவிட்டது;
யார் எங்கிருந்தாலும் ஆண்டவன் உணவிடுகிறான்.

நானும் இந்த நரி போல் சும்மா இருப்பேன்.
எனக்கும் உணவு கிடைக்கும்”
என்று நினைத்தான்.

ஒரு மரத்தடியில் சும்மா படுத்துக்கிடக்கலானான்.
பசி கொடுமையால் தவித்தான்.
உணவேதும் கிடைக்கவில்லை.
 விடாப்பிடியாக சும்மாவே கிடந்தான்.
பின் பசி பொறுக்காமல்,
“கடவுளே, ஏன் எனக்கு உணவிடவில்லை?”
என்று கத்தினான்.
அசரீரி கேட்டது:
“முட்டாளே!
ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்?
புலி போல இரு!”

தண்ணீர் அரசியல்


by Sankaran Nsk on Mon Nov 02, 2015 7:44 am
ஈகரை  மீள்பதிவு.
.
.
.தனியாருக்கு
ஆயிரம் லிட்டர் குடிநீர்
ரூ 36.
மக்களுக்கோ
ஒருலிட்டர்
ரூ 10..

Thursday, April 21, 2016

தகாத நட்பு


” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.!!
**************************************
ஒரு சிங்கம்,
ஒரு ஓநாய்,
ஒரு நரி
 மூன்றும் கூட்டு வைத்துக் கொண்டு வேட்டைக்குப் போயின. வேட்டையில் ஒரு கொழுத்த மான் கிடைத்ததாம்.
.
சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லிச்சாம்.
ஓநாயும் மூன்று சம பங்கா பிரிச்சுதாம்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிங்கம்,
காட்டு ராஜா எனக்கு இவர்கள்
சமமானவர்களா,
எனக்கு மரியாதை இல்லையா , அவர்களுக்கும் எனக்கும்
சமபங்கா அப்படியென்று நினைத்துக்கொண்டு பட்டென ஓநாயை அறைஞ்சுதாம்.
அடி வாங்கிய ஓநாய் மயக்கமா விழுந்திட
சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு
பிரிக்கச் சொல்லிச்சு.
நரியும் பவ்வியமா
மானோட காது ஒன்றை மட்டும் தனக்கு எடுத்துக்கொண்டு,
மிச்சத்தை சிங்கத்தின் பக்கமாகத் தள்ளியது.
சிங்கம் ஆச்சரியமாகி,
நரியே,
எப்படி உனக்கு இவ்வளவு பவ்வியமும் மரியாதையும் வந்தது என்று கேட்டது.
நரி இன்னும் பணிவாச் சொல்லிச்சாம்,
அதோ அங்கே மயங்கிக் கிடக்கிற ஓநாயிடமிருந்து கற்றுக்கொண்டேன், அப்படியென்று
சொல்லிவிட்டு ஒட்டம்

பிடித்ததாம். 

பணியே முதன்மை

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யவேண்டும்..!!

முதல்வணக்கம்


வணக்கம்.
.
உங்களுக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை,
அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவர் சொல்லிக்
கொடுப்பதை
நீங்கள்கேட்க தயாராக இருந்தால்
நீங்கள்வாழ்வில் வெற்றிபெறுவது
நிச்சயம்.

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk