Tuesday, June 28, 2016

நகைச்சுவை


மனைவி : என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்.. கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா ?

கணவன் : நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் டி தண்டனை கொடுக்குற ?

மனைவி :  :-ஙே................

பொற்கைநீதிக்காக தனது கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன். ================== பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு. அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம். அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர் யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும் பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன் என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர். பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு, நீதி தவறாதவன். பொய், களவு, கொலை முதலியவற்றுக்குச் சிறிதும் இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும் விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன். அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச் சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன் போல மாறுவேடம் பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந் தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும் நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன. ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும் இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும் அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின் இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும் பேச்சொலி கேட்டது. அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன் ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன். மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத் துணையும் இல்லாதவன். அரசன் அந்த வீட்டை அடைந்து மறைந்து நின்றான். உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான். "கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி, காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த, வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள் சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக் காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்? அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?" என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன் மனைவி. அதற்கு அவன், "நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான். அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்? நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப் பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான். காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன் களிப்புற்றான், கூத்தாடினான், அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள் பொழுது புலர்ந்தது. அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள் தேடி வரச் சென்ற கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன் ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு. பலரும் பலவாறு கருத இடமளிக்கும் என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள அனைவருக்குமே உணவுப் பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான். அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது. அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில் மாறுவேடம் பூண்டு நகர்க் காவல் சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும் நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப் பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல சென்றன. ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல் கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன் இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும் வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ, வேறு யாரோ என்ற ஐயம் அரசனுக்கு உண்டாயிற்று. அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத் தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான். அதனை அறியான் அரசன். கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன், வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய குரலில் கேட்டான். அவன் மனம் தீய எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன் மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள். அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும் வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான் என்று கூறினாரே அன்று. அந்த அரசன் இன்று எங்கே?" என்று அவள் கதறினாள். நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்; திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும் தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே" என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது. உடனே, அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளையும் தட்டி, ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி, அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர் அனைவரும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத் தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதினர்.


நீதிக்காக தனது கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன்.
==================
பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு.
அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம்.
அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய
மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர்
யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும்
பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன்
என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு,
நீதி தவறாதவன். பொய், களவு,
கொலை முதலியவற்றுக்குச் சிறிதும்
இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க
பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும்
விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத்
தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன்.
அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச்
சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும்
கொண்டிருந்தான்.
ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன்
போல மாறுவேடம்
பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந்
தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும்
நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர
வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த
தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ
ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள்
அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன.
ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும்
இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும்
அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின்
இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும்
பேச்சொலி கேட்டது.
அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன்
ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன்.
மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத்
துணையும் இல்லாதவன். அரசன் அந்த
வீட்டை அடைந்து மறைந்து நின்றான்.
உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக்
கேட்டான்.
"கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி,
காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த,
வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ
இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள்
சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக்
காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்?
அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?"
என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன்
மனைவி.
அதற்கு அவன்,
"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான்.
அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன
செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்?
நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப்
பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக
உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.
காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன்
களிப்புற்றான், கூத்தாடினான்,
அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள்
பொழுது புலர்ந்தது.
அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள்
இரவு நிகழ்ந்த
நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள்
தேடி வரச் சென்ற
கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய
மனைவியைக் காப்பாற்ற வேண்டும்
என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப்
பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன்
ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு.
பலரும் பலவாறு கருத இடமளிக்கும்
என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள
அனைவருக்குமே உணவுப்
பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான்.
அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.
அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில்
மாறுவேடம் பூண்டு நகர்க் காவல்
சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும்
நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப்
பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல
சென்றன.
ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல்
கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன்
இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும்
வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ,
வேறு யாரோ என்ற ஐயம்
அரசனுக்கு உண்டாயிற்று.
அந்த ஐயத்தைப்
போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த
பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத்
தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த
பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான்.
அதனை அறியான் அரசன்.
கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன்,
வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய
குரலில் கேட்டான். அவன் மனம் தீய
எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன்
மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள்.
அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும்
வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான்
என்று கூறினாரே அன்று. அந்த அரசன்
இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.
நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்;
திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும்
தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே"
என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.
உடனே, அந்தத் தெருவில் இருந்த
எல்லா வீடுகளையும் தட்டி,
ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி,
அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர்
அனைவரும் கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத்
தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக்
கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக்
கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான்
இருக்க வேண்டும் என்று கருதினர்.

பாண்டிய
அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக்
கேட்டு வருத்தப்பட்டனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது.
பார்ப்பனர்
அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக்
கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து,
முறை வேண்டினர். அரசன் வருந்தினான்;
அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய
முறையீட்டை கூறினான்.
"அவ்வாறு கதவைத்
தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"
என்று கேட்டான்.
அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து,
அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான
தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.
"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம்.
தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய
தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!"
என்றான்.
அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன்
கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!"
என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான்.
யாரையோ வெட்டப் போகிறான் அரசன்
என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்.
ஆனால், அரசன் தனது வலக் கையைத்
தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!
பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள்
தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம்
என்ன?" என்று கேட்டனர். அரசன்
நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.
மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்;
"இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க
அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல்,
பொன்னால் கையொன்று செய்து பொருத்திப்
பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என
அழைத்து வரலாயினர்.

ஹெலன் கெல்லர்


ஒலியை உள்வாங்கி உணர்ந்து பேச முடியும்?
ஏழு வயது வரை அவருடைய உலகம் இருண்டு தான் போயிருந்தது...
அதன் பின் அவருக்கு ஒலியையும் ஒளியையும் ஊட்டி புதுமைப் பெண்ணாய் ஹெலனை மாற்றிய பெருமைக்குரியவர் - ஆன் சல்லிவன்.
ஆன் சல்லிவன் யார்? - ஹெலன் ஹெல்லரின் இருட்டுக்குள் ஒளியேற்றிய காரிகை - ஆசிரியை.
எப்படி கற்பித்தார் எட்டு வயது சின்னஞ் சிறு சிட்டுக்கு?
பொருளை தொட்டுணரச் செய்தார் விரல்களால்...
பின் அதன் பெயரை உள்ளங்கையில் எழுதிக் காட்டினார்.
ஹெலனும் அதை விளையாட்டாக எண்ணி விரைவில் பல சொற்களை கற்றுக் கொண்டார்.
பின் சிறிது சிறிதாக எழுத கற்றுக் கொண்ட ஹெலன் ப்ரெயில் முறையை கற்று தேர்ந்தார்.
பத்து வயது நிறைவதற்கு முன் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார்.
அடுத்து...
ஹெலன் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்
ஸாரா புல்லர் - ஆசிரியை -'லிப் ரீடிங்' என்கிற உதடுகளை ஸ்பரிசித்து உணர்கிற கலையை கற்றுக் கொடுத்த மேதை.
வாயில் விரல் வைத்து உதடுகள் அசைவை உணர்ந்து ஓசை எழுப்ப பழகி, மற்றவர் அளவுக்கு இல்லாவிடினும், மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு பேச கற்றுக் கொண்டார்.
கேட்கும் திறனை மட்டும் அவரால் பெற இயலவில்லை. அதற்காக அவரும் சோர்ந்து போகவில்லை. உதட்டில் கை வைத்து உதட்டசைவில் வார்த்தைகளை புரிந்து கொள்ள கற்றுக் கொண்டார்.
பிறர் நடக்கும் போது எழும் அதிர்வினால் ஆளை இனம் காணவும் அவர் அறிந்து கொண்டார்.
1904 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். “தி ஸ்டோரி ஆஃப் மை லைப்“ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கல்லூரி பருவத்திலேயே. மொத்தம் 12 நூல்கள்எழுதியுள்ளார். பிரெயில் தட்டச்சு இயந்திரத்தையும் சாதரணமான தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார்.
இந்தியா உட்பட 39 நாடுகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். சேர்ந்த நிதியை பார்வையற்றோர்களுக்கு அளித்தார்.
1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் வழங்கப்பட்டது.
ஹெலன் சொன்னவை:
---------------------------------------
*வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்.
*ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பா
ர்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
*மகிழ்ச்சியான வாழ்க்கை - தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
ஜீன் 1-1968-ல் உறக்கத்திலேயே அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
.
நன்றி :#Herbert_Rajan

Tuesday, June 21, 2016

நீங்கள் யார்?



‪‎நீங்க‬ள் #உருளையா,
‪#‎முட்டையா‬ இல்ல #காபியா?
"முடியலப்பா! என்னால முடியல” என்று அலுத்துக் கொண்டாள் ஆசை மகள்.
”என்னம்மா ஆச்சு?” என்றார் அப்பா ஆதரவான குரலில்.
”வாழ்க்கைன்னாலே பிரச்னைகளும் போராட்டங்களும்தானா? ஒரு பிரச்னையை சமாளிச்சு முழி பிதுங்கி வெளில வர்றதுக்குள்ள இன்னொரு பிரச்னை கழுத்தைப் பிடிக்குது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அப்பா!”
சமையல் கலையில் கை தேர்ந்த அப்பா, தன் மகளை அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார். ஒரே மாதிரி பாத்திரங்கள் மூன்றில் நீர் நிரப்பி, மூன்றையும் அடுப்பின் மீது வைத்தார்.
அவளின் அலை பாயும் மனதைப் போலவே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்தில் சில உருளைக் கிழங்குகளைப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் ஒரு கோழி முட்டையைப் போட்டு வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் அரைத்த காபிப் பொடியைப் போட்டார்.
மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவின் செய்கைகள் அவளைக் குழப்பினாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகி விட்டாள்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு, வெந்த உருளைக் கிழங்குகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துப் போட்டார். வேக வைத்த கோழி முட்டையைத் தனியாக எடுத்து வைத்தார். காபி டிகாக்ஷனை ஒரு கோப்பையில் ஊற்றி வைத்தார்.
பிறகு மெதுவாக மகளின் பக்கம் திரும்பி, ”இப்ப சொல்லுடா செல்லம்! இங்கே என்ன இருக்கு?”
”என்னப்பா அறுக்கற, உருளைக் கிழங்கும், முட்டையும், காபியும் இருக்கு”
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ”இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு”
தொட்டாள். வெந்த உருளைகள் மிருதுவாக இருந்தன. பிறகு முட்டையின் கடினமான மேல் ஓட்டினை உறிக்கச் சொன்னார். அதன் பின் கோப்பையில் இருந்த காபியை குடிக்கச் சொன்னார். அந்தக் காபியின் நறுமணம் கொடுத்த புத்துணர்ச்சியில் லேசான புன்னகை தவழ்ந்தது அவள் முகத்தில்.
”இதெல்லாம் என்னப்பா?” என்றாள் புன்னகை மாறாமல்.
”மகளே! இன்னுமா புரியல? உருளை, முட்டை, காபி மூணுக்கும் ஒரே மாதிரி பிரச்சினைதான். கடினமா உறுதியா இருந்த உருளைக்கிழங்கு கொதிக்கிற தண்ணியில விழுந்த உடனே ரொம்ப மிருதுவா, பலவீனமா ஆயிருச்சி. முட்டையோட மேல் ஓடு அப்படியே இருந்தாலும் உள்ளுக்குள்ள திரவமா இருந்த கரு கடினமா மாறிடுச்சி. ஆனா காபி மட்டும் ரொம்ப வித்தியாசமா எல்லாரும் பிரியப்படற ஒரு நிலைக்கு மாறிடுச்சி. எல்லாருக்கும்தான் பிரச்சினைகள் இருக்கு. ஆனா அந்தப் பிரச்சினைகளால நாம எப்படி பக்குவப்படறோம்கிறதுலதான் வித்தியாசமே இருக்கு. உருளைக்கிழங்கு மாதிரி பலவீனமா மாறி நம் நிலையை நாம் இழக்க வேண்டாம். முட்டை கடினத்தன்மை அடைந்தது போல நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு விரக்தியில் இருக்கவும் வேண்டாம். காபியைப் போல நம்மையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நம்மோடு பழகுபவர்களையும் அட்ஜஸ்ட் கொள்ளச் செய்து எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி பிரச்சினைகளை சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்மா! ”
அவளுக்குப் புரிந்து விட்டது, இனி பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வதென!
உங்களுக்கு ???

நன்றி:#அருள்_பி_ஜி (முகநூல் பதிவு)

ஆசிரியம்.


ஆசிரியம் வெறும்தொழிலாகப் பார்க்கப்படுவது கிடையாது. அது சமூக மாற்றங்களை விளைவிக்கவல்ல கருவியாகவே கருதப்படுகின்றது. உலகை மாற்றிய மகத்தான மனிதர்களுள் பலர் ஆசிரியர்களாக இருந்திருப்பது வரலாற்று தரவுகளைப் புரட்டும் போது புலப்படுகின்றது. வெறுமனே வகுப்பறைகளில் பாடப்புத்தகங்களில் இருக்கும் விடயங்களை தயார்பண்ணிக் கற்பிப்பதுடன் மட்டும் ஒரு உண்மை ஆசிரியனின் பணி முடிந்துவிடுவது கிடையாது. ஒரு பிள்ளைக்கு வீட்டில் நல்ல ஆசிரியனும் பாடசாலையில் நல்ல பெற்றோரும் கிடைக்கும் போதே அவனால் தனது முழுமையை எட்ட முடியும் என்பது உளவியவாளர்களின் உரமான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படை எதுவெனில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோரைப் போலவும் இருக்க வேண்டும் என்பதேயாகும். இது தான் சமூகம் எதிர்பார்க்கும் ஆசிரியத்துவத்தின் மூலமாகும். எனவே ஒரு ஆசிரியன் எப்படி ஒரு பெற்றோராக இருக்க முடியும் என்பது குறித்து தீவிரமாக சிந்தித்தாகவேண்டும்.
🔵SankaranNsk 🔵

Tuesday, June 14, 2016

கடவுள் எங்கே?


கடவுள் எங்கே?
ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள
வழக்கமாகச் செல்லும் கடைக்குச்
சென்றான். முடிதிருத்துபவர்
அவனுக்கு நெருக்கமான நண்பர்.
இருவரும் பல விஷயங்கள்
பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர்.
அன்றும்
அப்படியே பலவிஷயங்கள்
பற்றி பேசினர். இடையில்
கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது.
முடிதிருத்துபவர், ""எனக்குக்
கடவுள் நம்பிக்கை இல்லை.
கடவுள் இருக்கிறார் என்று நான்
நம்ப மாட்டேன்!'' என்றார்.
""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
என்று கேட்டான் ராஜேஷ்.
""காரணம் மிகச் சுலபமானது.
தெருவில் போய்ப்பாருங்கள்.
கடவுள் இருந்தால் நோயால்
வாடுபவர்கள் இருப்பார்களா?
கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட
குழந்தைகள் தெருவில் அலையுமா?
கடவுள் இருந்தால் துன்பமும்,
வலியும் இராது. இதையெல்லாம்
அனுமதிக்கும் கடவுள் நிச்சயம்
இருப்பார் என்று நான்
நம்பவில்லை,'' என்றார்
முடிதிருத்துபவர்.
ராஜேஷ்
அதற்கு மறுப்பு சொல்லவில்லை.
வீணாக விவாதத்தை வளர்க்க
வேண்டாம் என்று மவுனமானார்.
முடிதிருத்தும் வேலைமுடிந்து,
ராஜேஷ் வெளியே போனார்.
அவர் போன சற்று நேரத்தில்,
வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த
முடியுமாய், ஒரு ஆள்
நிற்பதை கடைக்காரர் பார்த்தார்.
அந்த ஆளைப் பார்த்தால்,
முடிதிருத்தும் கடையை மாதக்
கணக்கில் எட்டிப் பார்க்காதவர்
போலத் தோன்றியது.
அவ்வளவு அடர்ந்தும்,
சடைபிடித்த முடியும் தாடியும்
இருந்தன.
அப்போது முன்னால் வந்து போன
ராஜேஷ் மீண்டும் கடைக்கு வந்தார்.
""என்ன?'' என்று கேட்டார்
முடிதிருத்துபவர்.
""ஒரு விஷயம்! முடிதிருத்துபவர்
யாருமே இல்லை என்று சொல்லலாம்,
'' என்று வந்தேன்.
""என்ன உளறுகிறீர்? இதோ! நான்
இருக்கிறேன். நானும்
ஒரு முடிதிருத்துபவன் தானே?
அப்படி இருக்க
முடிதிருத்துபவரே இல்லை என்று
எப்படி நீங்கள் சொல்லலாம்?''
என்று எரிச்சலாக கேட்டார்
முடிதிருத்துபவர் .
""இல்லை! முடிதிருத்துபவர்
இருப்பது உண்மை என்றால்
அதோ தெருவில் நிற்கிற அந்த
ஆசாமி இப்படி அலங்கோலமான
தலைமுடி, சிக்குப்பிடித்த
தாடியுடன் இருப்பானேன்?''
என்று கேட்டார் ராஜேஷ்.
""ஓ! அதுவா? விஷயம்
என்னவென்றால், அந்த
ஆசாமி என்னிடம் வருவதில்லை!''
என்றார் முடிதிருத்துபவர்.
""சரியாகச் சொன்னீர்கள். அதுதான்
விஷயம். கடவுளும்
இருக்கவே செய்கிறார். ஆனால்,
என்ன நடக்கிறது என்றால், மக்கள்
அவரை அணுகுவதில்லை.
அவரைத் தேடிப் போவதில்லை.
அதனால்தான் எங்கும் நிறைய
துன்பமும், வேதனையும் உலகில்
நிறைந்துள்ளன!'' என்றார் ராஜேஷ்.
உண்மையை உணர்ந்தார்

  • முடிதிருத்துபவர்.

Monday, June 06, 2016

விருப்பம்

அற்ப சந்தோஷங்கள்
அற்ப வாழ்வாகிவிடும்....
...............

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை"
என்று முறையிட்டனர்.

இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்.

"இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது"

அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.

"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே"

என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,
பரமஹம்சர் சொன்னார்

" எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.
மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால்,
நடுவிலே கிடைக்கிற
அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".

‪#‎தில்லைகுப்பன்‬

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk