Tuesday, May 31, 2016

கோபம் - ஜென் கதை

கோபம் -ஜென்
.

பாங்கே BANKEI என்ற ஜென் மாஸ்டரிடம் ஒரு ஜென் மாணவன் வந்து

” மாஸ்டர்,
என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படிச் சரி செய்வது?”
என்று கேட்டான்.
அதற்குப் பாங்கே,
“ உன்னிடம் ஏதோ
மிகவும் வித்தியாசமான ஒன்று இருக்கிறது. அதுதான் கோபம்!
எங்கே அதைச் சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்.”
என்றார்.

” இப்பொழுது என்னால் அதை உங்களுக்குக் காட்ட முடியாது் ”


“ எப்பொழுது அதை என்னிடம் காட்டமுடியும்? ”

“ அது தானே எதிர்பாராது மேலே கிளம்பும். ”

“ அது உண்மையானது என்றால்,
அது இயல்பானது என்றால்
எந்தச் சமயத்திலும் அதை என்னிடம் உன்னால் காட்ட முடியும்.
நீ பிறந்த போது,
அது உன்னிடம் இருந்தது இல்லை.
அதே சமயம் அதை உன்னுடைய பெற்றோர்களும்
உன்னிடம் கொடுத்தது இல்லை.
நன்றாக யோசனைப் பண்ணிப்பார்
என்றார்.

கோபம் என்பது எதிர்ப்பார்ப்பதில்லை.

ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல் (REACTION).

எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது.

ஏமாற்றத்திலிருந்து கோபம் உண்டாகிறது

தூக்கம்


தூக்கமின்மை-
காரணங்களும் சிகிச்சையும்:

தூக்கமின்மை என்றால் என்ன?

உடலின் ஆரோக்கியமான செயல்திறனுக்காக, 
ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்வதே தூக்கம். 
இந்நிகழ்வு நடக்காமல் போவதே தூக்கமின்மை.


தூக்கமின்மை வரக் காரணம்?

மன அழுத்தமே 
முக்கிய காரணம். 
அதோடு மாறி வரும் 
வாழ்க்கை முறை, 
உணவுப் பழக்கம், 
பணியிட நெருக்கடி, 
கவலை, 
பணிச் சுமையால் ஏற்படும் 
மனச் சோர்வுகளும் காரணம். 
உடல் உறுப்பில் ஏதேனும் வலி இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கமின்மையின் அறிகுறிகள்?

                    அதிகாலையிலேயே விழிப்பது , 
தூக்கத்திற்குப் பின்னும் 
அசதியாக இருப்பது, 
சோர்வாக உணர்தல், 
எரிச்சலான மனநிலை, 
எதிலும் கவனமின்மை மற்றும் ஆர்வம் குறைந்த நிலை, 
தலைவலி, 
செரிமானக் கோளாறுகள் தூக்கமின்மையின் அறிகுறிகள்.

தூக்கம் உடலுக்கு அத்தியாவசியத் தேவையா?

                     தூங்கும்போது, மூளையில் மெலோடனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. 
இதனால், உடல் தசைகள், எலும்புகள் மட்டுமின்றி மனநலமும் காக்கப்படுகின்றது. 
தூக்கத்தால் உடல் சோர்வு, 
மனச் சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.

நீண்ட நாட்களாக ஒருவர் தூக்கமின்மையில் இருந்தால், வரும் பாதிப்புகள் என்ன?

         மூளைக்கும் உறுப்புகளுக்குமான தகவல் தொடர்பு சிதையும். அதிகப்படியான தசைச் சோர்வு, கை கால்களை அசைக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். 
செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது. 
எரிச்சலுடன் பேசுவது, காதுகளில் கற்பனை ஒலிகள் கேட்பது, ஞாபக மறதி போன்றவையும், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்தான்.


குறுகியகால தூக்கமின்மைக்கும் நீண்டகால தூக்கமின்மைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

        2 வார காலத்திற்கும் மேலாக தூக்கம் இல்லாமல் இருப்பது, குறுகிய கால தூக்கமின்மை. இதை எளிதில் குணப்படுத்திவிடலாம். தூக்கமின்மை 1 மாத காலத்திற்கும் மேல் நீடித்தால், அது நீண்டகால தூக்கமின்மை. இப் பாதிப்பில் உள்ளவர்களுக்கு மனச் சோர்வு நோய் இருக்கும்.எந்நேரமும் அர்த்தமில்லாத பயத்தில் தவிப்பர்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எவ்வளவு தூக்கம் தேவை?

அ) பச்சிளம் குழந்தை 3 மாதம் வரை- 15 மணி முதல் 18 மணி வரை

ஆ) நடை பழகும் குழந்தைகளுக்கு- 14 மணி

இ) 3-8 வயது குழந்தைகள் வரை-16 மணி

ஈ) 5 வயது குழந்தைகள்-13 மணி

உ) 10 வயது குழந்தைகள்- 11 மணி

ஊ) 10-17 வயது வரை-9 மணி

எ) பெரியவர்கள்- 7-8 மணி


*   புகைப் பழக்கம் எவ்வாறு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது?
  
      புகையிலையில் இருக்கும், ‘நிகோட்டின்’ தூக்கத்திற்கு முதல் எதிரி. இது புகை வழியாக, ரத்தத்தில் கலந்து, மூளையை அடைந்து, சில மணி நேரங்களுக்கு மூளையை தூங்கவிடாமல் செய்வதால், தூக்கமின்மை ஏற்படுகின்றது.


மது அருந்துபவர்கள், அதை அருந்தியவுடன் தூங்கி விடுகின்றனரே; இவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுமா?
        
         மது அருந்துவதால் ஏற்படுவது மயக்கம்தானே தவிர , தூக்கம் இல்லை. மதுவிலுள்ள, ‘எத்தில் ஆல்கஹால்’ மூளையின் நுண் நரம்புகளை  சேதமடையச் செய்து, மூளையை செயற்கையாக முடக்கிவிடுகிறது. மது அருந்துபவர்களுக்கு கட்டாயம் தூக்கமின்மை ஏற்படும்.


தூக்கமின்மைக்கான மருத்துவ தீர்வுகள் என்னென்ன?

          மூளையில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வினால், மனச் சோர்வு, மனப் பதற்றம் போன்றவை ஏற்படுகின்றன.இதற்கு, உளவியல் சிகிச்சை மூலம், மூளையில் சுரக்கும் ஹார்மோன்களை சமன் செய்வதன் மூலம், சரி செய்யலாம். உடல் நலக் கோளாறு  காரணம் என்றால், அதற்குண்டான சிகிச்சை செய்தாலே, தூக்கமின்மையைப் போக்கலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^
#SankaranNsk 

Tuesday, May 24, 2016

சோரியாசிஸ்.


சொரியாசிஸ்- புங்கமரம்
******************************.
குணப்படுத்தும் புங்க மரம்
சுத்தமான காற்றைக்
கொடுக்க கூடியதும், தோல்நோய்களைக்
குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,
மூட்டு வலியைப்போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பைச்சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களைப்போக்கும்
தன்மை கொண்டதுமான
புங்க மரத்தின் பயன்கள் பற்றி தெரியுமா?.
வீட்டின் முன்பு
இருக்கக் கூடியது புங்க மரம்.
இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது.
பூமிக்கு சத்துக்களைத்
தரக்கூடியது.

இதன் இலைகள்
புற ஊதா கதிர்களைத் தாங்கி நிழலைத் தரக்கூடியது.
நல்ல சுத்தமான காற்றைக்கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளைத்
தடுக்க கூடியது.
புங்க மரத்து இலைகள்,
காய்கள்,
பூ,
வேர்,
பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க விதைகளைப் பயன்படுத்தி மூட்டு வலி,
தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
.
.
இதை பொடித்து வைத்துக்கொள்ளவும்.
அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி குடிக்கத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும்.
தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு
மருந்தாகிறது.
இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது.
இது ஆஸ்துமா,
நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது.
சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம்.
புங்க எண்ணெய்யைப்
பயன்படுத்தி
சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம்.
புங்க எண்ணெய்,
பரங்கி பட்டை சூரணம்
ஆகியவற்றைத்
தைலப்பதத்தில் காய்ச்சவும்.
இதைப் பூசினால் சொரியாசிஸ் குணமாகும்.
தோலில் ஏற்படும்
அரிப்பு சரியாகும்.
புங்க எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
புங்க இலையைப்பயன்படுத்தி
உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலையை,
மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும்.
தலையில்
பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி
10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.
புங்க இலை தோலுக்கு
ஆரோக்கியம் கொடுக்கிறது.
தோல் மென்மை தன்மை அடைகிறது.
அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது.
புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை,
ஈரல் வீக்கம் சரியாகும்.
ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது.
புங்க எண்ணெய்யைப் பயன்படுத்தி மூட்டு வலி,
கால் வலி,
கீல்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதை மூட்டுகளில் வலி,
வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும். புங்க எண்ணெய்,
வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது.
நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.
#SankaranNsk

Monday, May 23, 2016

ஹீமோகுளோபின்-2


உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.
அவற்றை வாங்கி அதில்
72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில்
தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு,
அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு,
காலை ஒரு பழத்தைத் தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு,
சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்.
இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்.
இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும்,
வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியம் மிக முக்கியம்.
#SankaranNsk

ஹீமோகுளோபின்-1


ஹீமோகுளோபின்
***********************
.
உடலில் அதிகமான அசதி.
எந்த செயலைச்செய்ய வேண்டுமானாலும்,
பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை,
எதிலும் ஆர்வமின்மை,
உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும்
களைப்பு,
தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால்
படுத்தால் தூக்கம் வராது.
தூக்கம் வராததால்
உடல் ஓய்வு பெறாமல்
ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி.
எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்.
இந்த நிலையில்தான்
இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை,
மருந்து வாங்கி சாப்பிடலாம்
என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து
அவரைப் பார்த்தால்
பல பரிசோதனைகளைச் செய்யச் சொல்லுவார்.
அவர் கூறிய பரிசோதனைகள் அனைத்தும் செய்து,
அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால்,
உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.
நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன்.
ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார்.
அவர் கொடுக்கும்
அதிக விலையுள்ள மாத்திரைகளையும்,
மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி,
அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து,
ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர,
மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை.
நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது.
பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை
இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ,
அதே தடங்கலும்,
தாமதமும்
நம் உடலில் ஏற்படுகிறது.
உடலில்
ஹீமோகுளோபின்
குறையும் பொழுது
மேலே குறிப்பிட்ட
அத்தனை குறைபாடுகளும்
ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல்
அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது.
எவ்வளவு சத்துக்கள்,
எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு,
மீதி உள்ளவற்றைக் கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது.
அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும்,
அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின்
14 - 18 கிராம் அளவிலும்,
******************************
பெண்களுக்கு
12 - 16 கிராம் அளவிலும்
******************************
இருக்கவேண்டும்.
‪#‎8கிராம்_அளவிற்கு_கீழே_குறையும்‬ பொழுது,
‪#‎இரத்த_சோகை‬ என்ற நோயும்,
மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும்.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது,
உடல் மெலிந்து,
களைப்பு,
இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் ‪#‎அதிகரிக்கும்‬ பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும்,
உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களைக்
கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு,
உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி,
அவைகளை நன்கு இயக்கி,
உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
🔵SankaranNsk 🔵

Saturday, May 21, 2016

கோபம்


அது காட்டை ஒட்டிய வனப்பகுதி.
பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றைப்பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன்
மாமிசத்திற்காக கொல்லவில்லை.
வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது.
ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம்.
இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள்.
அவன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து
பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவெடுத்தது.
உடனே கடவுளைத் துதித்தான்.
"கடவுளே எனக்கு தரிசனம் தா…!"
கடவுளும் வந்தார்…!
" பக்தா என்னை அழைத்ததன் காரணம் என்ன? "
கடவுள் கேட்டார்.அறிவாளி பக்தன் என்ன கேட்கணும்? நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்றுதானே கேட்டிருக்க வேண்டும்?
ஆனால் அவன் அப்படி
ஏதும்கேட்கவில்லை.
கோபம் கண்ணை மறைத்தது.
" தெய்வமே…
நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன்.
அந்த மானைக் காணவில்லை.
அந்த மானைத்திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோபம் தீர அடிக்க வேண்டும் ".
இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு
வேண்டும் வரம் தரும்
கடவுள்
பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
" பக்தா..
உன் மானை
வேண்டுமானால்
திருப்பித் தருகிறேன்.
அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.இல்லை.. "
.
"என் மனம் எவ்வளவு
கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்.
அதனால் அவனை பழிவாங்காமல்
விடமாட்டேன் ", என்று பிடிவாதமாக கேட்டான்.
" சரி..
நீ கேட்கும் வரத்தைத்தருகிறேன். என் மீது வருத்தப் படக்கூடாது ".
"வருத்தம் வராது".
" சரி.. தந்தேன் வரம்.
உன் மானைத் திருடி சென்றவர் யாரோ,
அவர் உன் பின்னால் நிற்கிறார்.
தண்டித்துக் கொள் ". -
வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன்
திரும்பிப்
பார்த்தவன்
அதிர்ந்தான்.
அங்கே நின்றது
ஒரு சிங்கம்.
.
.
பழிவாங்கும்
சினம் மறைந்தது.
பயம் பிடித்து கொண்டது.
கை கால் எல்லாம்
நடுங்கத்தொடங்கியது.
கண் மண்
தெரியாமல் ஓடினான்.
" கடவுளே ,
என்னைக் காப்பாத்து.
.
கடவுள் சிரித்தார் …
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.
இங்கே அவன்
அறிவு வேலை செய்யவில்லை.
ஆத்திரம் கடைசியில்
அழிவைத் தந்தது.
தேவையில்லாக் கோபம் மனிதரின்
இனிய பண்புகளைச்சுட்டு எரிக்கும் தீ.
கவனம்.
🔵SankaranNsk🔵

Friday, May 13, 2016

மகிழ்ச்சி

அன்று பள்ளி விடுமுறை 

என்றதால் சில சிறுவர்கள் 

சேர்ந்து, அந்த ஊரில் 

இருந்த ஒரு குளக்கரைக்கு 

வந்தனர்.


அந்தக் குளத்தில் 

பல தவளைகள் குதித்து 

விளையாடிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட 

சிறுவர்கள் மகிழ்ச்சி மேலிட..

அந்தத் தவளைகள் மீது 

யார் அதிகம் 

கல் எறிகிறார்கள் 

பார்க்கலாம் என்று 

போட்டி போட்டுக் கொண்டு, 

கரையில் இருந்த 

கற்களை எடுத்து 

தவளைகள் மீது வீச ஆரம்பித்தார்கள்.

இதனால் பல தவளைகள் 

காயம் அடைந்தன.

அப்போது, 

தைரியமாக

ஒரு தவளை..

அவர்களிடம் வந்து..

"கல்லெறிவதை நிறுத்துங்கள்.

உங்கள் விளையாட்டால் 

சற்று முன் வரை 

மகிழ்வோடு 

விளையாடிக் கொண்டிருந்த எங்களில் பலர் 

காயமடைந்து

வேதனையில் உள்ளனர்.

நீங்கள் மகிழ்வாய் 

இருக்க வேண்டுமென..

எங்களை 

வேதனைப் படுத்தலாமா?:"

என்றது.

சிறுவர்களும் தங்களது 

தவறை உணர்ந்து 

தவளையிடம் 

மன்னிப்புக் கேட்டனர்.

நமது மகிழ்ச்சி..

இன்னொருவர் 

வேதனையால் 

ஏற்படக்கூடாது.

தாராபாரதி

மே 13 இன்று 

தமிழ் கவிஞர் தாராபாரதி, ஆங்கிலத்தில் எழுதிய 

ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆர். கே. நாராயண் ஆகியோரின் நினைவு தினம்....

திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

இவரது படைப்புக்கள்

புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை), விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்...
தன்பாட்டுத்திறத்தால் மக்களை விழிப்புணர்வூட்டிய கவிஞர் தாராபாரதியின் சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற பாடல் பலரது நெஞ்சிலும் நின்று வளர்த்தெடுப்பவை.
  திண்ணையை இடித்து தெருவாக்கு 
×******************************************
உட்கார் நண்பா நலந்தானா?-நீ 
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன் 
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?

புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி 
புலம்ப வேண்டாம்-நெல்கூட 
புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது 
பூமியின் பசியைப் போக்க வில்லை? 

கடலின் நான் ஒரு துளிஎன்று
நீகரைந்து போவதில் பயனென்ன? 
கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு 

வந்தது யாருக்கும் தெரியாது- நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது 
சந்ததிகூட மறந்துவிடும் -உன் 
சரித்திரம் யாருக்கு நினைவு வரும்? 

உணவு ஆடை வீடென்று -உன் 
உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
மனைவி மக்கள் வீடென்று -உன் 
மனதின் எல்லையை சுருக்காதே 

திண்ணைதானா உன்தேசம்-உன் 
தெருவொன் றேவா உன் உலகம் 
திண்ணையை இடித்து தெருவாக்கு -உன் 
தெருவை மேலும் விரிவாக்கு 

எத்தனை உயரம் இமய மலை -அதில் 
இன்னொரு சிகரம் உனது தலை 
எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ 
இவர்களை விஞ்சிட என்ன தடை?

பூமிப் பந்து என்ன விலை -உன் 
புகழைத் தந்து வாங்கும் விலை;
நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா 
நல்லதை எண்ணிச் செயல்படுவோம் 
-தாராபாரதி 

Thursday, May 12, 2016

ஏழு பாவம்

நம் மகாத்மா காந்தி அவர்கள் வரிசைப்படுத்தும் ஏழு பாவங்களைப் பாருங்கள்.

1.கொள்கை இல்லா அரசியல்

2.உழைப்பு இல்லா செல்வம்

3.நன்னெறி இல்லாத வியாபாரம்

4.குணமற்ற கல்வி

5.மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம்

6.மனசாட்சியற்ற இன்பம்

7.தியாகமில்லாத வழிபாடு

Saturday, May 07, 2016

சிந்தனை


சிந்தனை

========

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். 

அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.

அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. 

சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க 

அமெரிக்காவில் இருந்து 

ஒரு ஸ்கேன் மெசின் 

ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . 

அது துல்லியமா 

சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. 

அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதே போல் இந்தியாவில் 

ஒரு சோப்புத் தூள் 

கம்பெனியிலும் ஆச்சு. 

அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்கு 

ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். 

சோப்புத் தூள் இல்லாத 

பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு.

‪#‎indian_brain‬.

Friday, May 06, 2016

பாடல்.. திகட்டுதலில்லா இனிமை


மனம் கவர்ந்தபாடல்.

.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க 
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை 
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை 
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே? 
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் 
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

ஆரூர் ஆன்மிகம்

#சுந்தர்_வாசுதேவன் 

நண்பரின் முகநூல்பதிவிது

திருவாரூர் காட்சிகொடுத்தார் கோயிலும்...விறன்மிண்ட நாயனார் வரலாறும்.

==============================================
தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார் செங்கனூரில் பிறந்த விறன்மிண்டர். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது. வழக்கம் போல் சுந்தரமூர்த்தி நாயனார் வன்மீக நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார்.
இதனைக் கவனித்த விறன்மிண்டர், சுந்தரரை தவறாக எண்ணினார். அடியார்களை மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
விறல்மிண்டர் அவர்மீது சினங் கொண்டார். 
திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு விறல்மிண்டர் கூறினார்.
சுந்தரர் மீது கோபம் கொண்ட அடிகளார் சுந்தரரையும் வெறுத்தார். திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூர் எல்லையைத் தீண்டுவதில்லை என்று தமக்குள் ஒரு திடசங்கல்பம் பூண்டார். அத்துடன், அந்த அடியார் மற்றொரு வைராக்கியத்தையும் கடைப்பிடித்து வந்தார். தமது இல்லத்திற்கு விருந்திற்கு வரும் அன்பர்களிடம், எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்பார். அவர்கள் திருவாரூர் என்று சொன்னால் உடனே அடிகளார், அடுத்துள்ள கொடுவாளை எடுத்து விருந்துண்ண வந்தவரின் காலைத் துண்டிப்பார். (இந்த இடம் இப்போது ஆண்டிப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது)
திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான், தனது அன்புத் தொண்டனை ஆட்கொண்டருளத் திருவுள்ளம் கொண்டார்.
எம்பெருமான் சிவனடியார் போல் வேடம் பூண்டார். நேராக நாயனார் இல்லத்திற்கு வந்தார். வாயிலிலே நின்று கொண்டு எம்பெருமான், பவதி பிக்ஷம் தேஹீ என்று குரல் கொடுத்தார். அடுப்படியில் வேலையாக இருந்த நாயனாரின் மனைவியார் வெளியே ஓடி வந்தாள். சிவனடியாரைக் கண்டு அகமும் முகமும் மலர வாருங்கள் என்று முகமன் கூறி உள்ளே அழைத்துச் சென்றாள்.
சுவாமி! என் கணவர் வந்துகொண்டே இருக்கிறார். அதற்குமுன் தேவரீரிடம், இந்த ஏழைக்கு ஒரு சிறு விண்ணப்பம். அம்மணீ! மங்களம் உண்டாகட்டும். விஷயத்தைச் சொல்வாய். அம்மையார் அடியாரிடம் நாயனாரின் சங்கல்பத்தைச் சொல்லி, சுவாமி! தாங்கள் தயவு செய்து ஊரைப் பற்றிக் கேட்டால் திருவாரூர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டாள்.
எம்பெருமான் குறுநகை சிந்த, அம்மணீ! எனக்குப் பொய் பேசத் தெரியாது. அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அவர் சாப்பிடும்போது கொடுவாளை வலது புறம்தானே வைத்திருப்பார். இன்று மட்டும் அதனை இடதுபுறம் வைத்துவிடு. மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன். என்றார். அம்மையாரும் அதற்குச் சம்மதித்தார்கள். அதற்குள் நாயனாரும் உள்ளிருந்து வெளியே வந்தார். நாயனார், சிவனடியாரை வரவேற்று விருந்திற்கு எழுந்தருளச் செய்தார்.
இருவரும் இலை முன் அமர்ந்தார்கள். மனைவியார் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். நாயனார் வழக்கம் போல் தமது கேள்வியைக் தொடங்கினார். சுவாமிக்குச் சொந்த ஊர் எது? அங்கிங்கெனாதபபடி எங்கும் இருப்பேன். ஆயினும் அடியேன் சொந்த ஊர் திருவாரூராகும்! என்ன! திருவாரூரா? அடியார்களை அவமதிக்கும் அந்த அற்பன் வன்றொண்டன் வாழும் ஊரில் பிறந்தவரா நீர்? உம்மை என்ன செய்கிறேன் பார் என்று வன்மொழி கூறினார்.
நாயனார் கண்கள் கோபத்தில் சிவந்தன. சட்டென்று வலது பக்கம் திரும்பி கொடுவாளை எடுக்க முயன்றார். அங்கு கொடுவாளை காணாது மனைவியை நோக்கினார். அவர்கள் பயத்துடன், இடது புறம் வைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது என்று கூறினாள். நாயனார் சட்டென்று இடது பக்கம் திரும்பினார். இதற்குள் அடியார் எழுந்து வெளியே ஓடிவிட்டார்.
நாயனார் அடியாரைத் துரத்திக் கொண்டு ஓடினார். அடியார் ஓட, நாயனார் துரத்த இருவரும் ஓடி ஓடி திருவாரூரின் எல்லையை அடைந்து ஊருக்குள் வந்து சேர்ந்தனர். நாயனார் களைத்துப்போன நிலையில் நிலத்தில் விழுந்தார். அடியார் சிரித்துக்கொண்டே, நீர் இப்பொழுது திருவாரூர் எல்லையைக் கடந்து ஊருக்குள்ளே வந்து விட்டீரே என்றார். (தியாகேசர் "வந்தோம் இப்பால்" என்று கூறிய இடமே இன்றும் ஆரூரின் எல்லையில் "வண்டாம்பாளை" என்று மருவி அழைக்கப்படுகிறது)
நாயனார் மனம் பதறிப் போனார். ஆத்திரத்தால் துடித்தார். தவற்றை உணர்ந்தார். கொடுவாளை எடுத்துத் தமது காலை வெட்டிக் கொண்டார். நாயனாரின் செயலைக் கண்டு சிவபெருமான் அதற்கு மேலும் பக்தனைச் சோதிக்க விரும்பவில்லை. ரிஷப வாகனத்தில் கமலாம்பாள் சமேதராய் காட்சி கொடுத்தார் திருவாரூர் தியாகேசப் பெருமானார்!
விறன்மிண்டருக்கு தியாகேசர் ரிஷபாரூடரக காட்சியளித்த இடமே "காட்சி கொ

Wednesday, May 04, 2016

ஒரு ரூபாய் தர்மம்

ஒரு ரூபாய் தர்மம். 

திருவண்ணாமலை 
கிரிவலம் வரும்போது
வித்தியாசமான 
"ஒரு ரூபாய் தர்மம்" செய்யுங்க கோவில் கட்டப்போறம் 
என்ற குரலைக்
கேட்கமுடியும். 
சரி, 
அதற்கென்ன இப்போ
என்பதற்கு பதில்.....
திருவாரூரில் 
ஒருசில
அலைபேசி 
தொகையேற்றும் (ரீசார்ஜ்) கடைகளில் 
இந்த 
ஒருரூபாய் பிச்சை 
தொடர்கிறது. 
பத்து ரூபாய்க்கு 11கேட்கிறார்கள்.
150ரூ.க்கு 
151 ரூ. கேட்கிறார்கள். 
அதையும் 
நியாயப்படுத்துகிறார்கள்.
பாவிப்பாளர்களும் 
ஒரு ரூபாய் தானே போகட்டும் 
என்று விட்டுவிடுகின்றனர்.
இந்த 
ஒரு ரூபாய் அறத்திற்குக்
காரணம் ஏதுமுண்டா 
அறிந்தவர்கள் 
விளக்கம் தரவும்.
நன்கு 
சிரித்துப்பேசிக்
கொண்டே 
ஒரு ரூபாய் கேட்பது 
இன்னும் 
அசிங்கமாக உள்ளது.
பல கடைகளில் 
சரியான தொகையே
கேட்கிறார்கள். 
உங்கள் ஊரிலும்
உண்டா? 


Monday, May 02, 2016

குதிகால் வலி

குதிகால் வலிக்கு விடை தரலாம்.


தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். 
ஆனால், 
இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். 
வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், 
சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 
பிறகு, 
இவர்கள் பகல் முழுவதும் 
வேலை பார்த்துவிட்டு, 
இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி 
ஏற்படும். 
இந்தப் பிரச்னைக்கு ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ என்று பெயர். 
குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. 
குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் 
இணையும் இடத்தில்
ஒருவித அழற்சி ஏற்பட்டு, 
வீக்கம் உண்டாகிறது. 
இதனால் குதிகால் வலி 
ஏற்படுகிறது.

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். 
குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், 
சீக்கிரமே அழற்சி அடைந்து 
குதிகால் வலியை 
ஏற்படுத்திவிடும்.

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், 
தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 
கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. 
சைக்கிள் ஓட்டும் பயிற்சி, 
குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. 
உடல் பருமன் இருந்தால் 
எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் 
பாரம் குறைந்து வலி 
சீக்கிரத்தில் விடைபெறும். 
குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. நீரிழிவு நோய் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.

பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். 
அழுத்தமான ஷூக்களையும் அணியக்கூடாது. 
லூசான ஷூக்களையும் அணியக்கூடாது. 
புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது, 
எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரிதான்!
.
கவனம்.
.
இனி 
நண்பர்
‪#‎சுந்தர்_வாசுதேவன்‬ தரும் எளிய மருத்துவம். 
.
ஓட்டு வீடுகளில் உடைந்த ஓடு இருந்தால் அதனை சூடாக்கி அதன் மீது எருக்க இலையினை போட்டு அதில் குதிகாலை வைத்து வந்தாலே இந்த குதிகால் வலி போய்விடும்..எருக்க இலை குதிகால் வலிக்கு சிறந்த மருந்து. பிளான்டார் திசுவின் கொழுப்பை சூடான எருக்க இலை கரைத்து விடும். 

வாழ்க்கை

வாழ்வதும் போவதும்

**************************


ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை புரிய வைக்க நினைச்சரு. எல்லாரையும் கூப்புட்டு உக்கார வச்சு, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காமிச்சாரு. அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டாரு. ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒண்ணுமே புரியலை.
 வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் ததுவம் இருந்திடப்போகுதுனு குழம்பினவன், மெதுவா குருவையே எழுப்பி கேட்டான். அவர் கேட்டார்..
 'என் வாய்குள்ள 
என்ன இருந்தது?'
.
'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'
.
'பல் இருந்ததா?'
.
'இல்லை.'
.
'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'


வணக்கம் சிந்தனைகள்

வணக்கம். 

.
வாழ்க்கையில்
நிறைய
பெறவேண்டும் என்றால்
நிறைய
கொடுக்க
வேண்டும்.

Sunday, May 01, 2016

இரட்டை இலை... பாண்டு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வடிவமைத்தது யார்? 


அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வடிவமைத்தது யார்?

550 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பாண்டுவின் டிரேட் மார்க், அவரது சிரிப்பு. அதிமுக-வின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை வடிவமைத்தவர் இவர்தான். அந்த அனுபங்களை பகிர்ந்து கொள்கிறார் பாண்டு. ‘அப்போதுதான் அதிமுக-வை எம்ஜிஆர் தொடங்கி இருந்தார். ஒருநாள் இரவு எம்ஜிஆர் வீட்டுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. உடனடியாக கிளம்பி சென்றேன். என்னைப் பார்த்ததும் எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி ‘சாப்பிட்டாயா?’ என்பதுதான். பிரியாணியும் சிக்கனும் கொண்டு வரச்செய்து சாப்பிட வைத்தார். அதிமுக கொடியை உருவாக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வீட்டின் கீழ்தளத்தில் உள்ள ஓர் அறையில் வேலை முடியும்வரை பூட்டி வைக்கப்பட்டேன். எம்ஜிஆர் அறிவுறுத்தலின்படி நான்கு முறை மாற்றி மாற்றி, இறுதியாக இப்போது நீங்கள் பார்க்கும் அதிமுக கொடி முழுவடிவம் பெற்றது. அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை உருவத்தை மனதில் கொண்டு முதலில் கொடியை உருவாக்கினேன். அதாவது அறிஞர் அண்ணா விரைப்பாக கையை நீட்டிக் கொண்டிருப்பதுபோல் அண்ணாவின் உருவத்தைக் கொடியில் உருவாக்கியிருந்தேன். எம்ஜிஆருக்கு திருப்தி இல்லை. ‘இது போதாது. எம்.ஆர்.ராதா என்னைச் சுட்டார். அண்ணாவும் என்னை நோக்கி ஏன் சுடவேண்டும்?’ என்றார். எனவே, அண்ணா தனது விரலை மேலாக நீட்டுவது போல் கொடியில் வடிவமைத்தேன். 1977 தேர்தலுக்கு முன்பாக எம்ஜிஆர் மீண்டும் என்னை அழைத்தார் கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை உருவாக்கும் பொறுப்பை கொடுத்தார். நானும் வடிவமைத்து கொடுத்தேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பல்கலைக்கழக அரங்கில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. என்னை மேடைக்கு அழைத்த எம்ஜிஆர், நான்கு சவரன் தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கினார்’. இவ்வாறு எம்ஜிஆருடனான தனது மலரும்நினைவுகளை பகிர்ந்து கொண்டார், நடிகர் பாண்டு.

பெரியாரும் மிட்டாயும்

பெரியார்.

.ஒரு சமயம் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த பெரியார் (முழுப் பெயர்: ஈ.வெ.ராமசாமி) அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றார்.

ஒரு காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார்.

வந்தவர் தந்தை பெரியார் என்பதை அறிந்த கடைக்காரர், காலணாவை வாங்கிக் கொண்டு கை நிறைய மிட்டாய்களை அள்ளிக் கொடுத்தார். மிட்டாய்களை வாங்கிய

பெரியார் கடைக்காரனைப் 

பார்த்து, 

“எங்க ஊர்ல இவ்வளவு தரமாட்டேங்கறான். 

நீங்க கை நிறையத் தர்றீங்க.

அப்ப இன்னொரு காலணாவுக்குத் தாங்க!” என்று கூறிவிட்டு இன்னொரு காலணாவை எடுத்து நீட்டினார். 

கடைக்காரர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். கொடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்துத் தடுமாறினார். 

அப்போது பெரியார், 

“”ஐயா! வியாபாரத்துல வியாபாரியாத்தான் இருக்கணும். காலணாவுக்கு இவ்வளவு மிட்டாயை அள்ளிக் கொடுத்தா, உங்க வியாபாரம் என்னாகிறது.

நானாக இருந்தாலும், எத்தனை வேண்டியவரா இருந்தாலும் உள்ளதைத்தான் தரணும்!” என்றார். பின்னர் ஒரே ஒரு மிட்டாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி மிட்டாய்களைக்கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார் தந்தை பெரியார். அவரது நியாயமான நடத்தையைக் கண்ட கடைக்காரர் பெரிதும்
வியந்தார்.

சொர்க்கமும் நரகமும்

சொர்க்கமும் நரகமும்.

சொர்க்கமும் நரகமும்

***************************

ஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். 

ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். 

சாமுராய் வீரர் துறவியிடம் 

ஒரு சந்தேகம் 

கேட்க வேண்டும் என்று சொன்னார். 

துறவி புன்னகையுடன் தலையசைத்தார். 

சாமுராய் வீரர்

"ஐயா எனக்கு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசம் தெரியப் படுத்துங்கள்" என்றார்.

துறவி பதிலேதும் சொல்லாமல் புன்சிரித்துக் கொண்டிருந்தார். 

சாமுராய்க்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. 

தனது சாமுராய் வாளை உறுவிக்கொண்டு

"உன்னை மதித்துக் கேள்வி கேட்பவனை அவமதிப்பாயா?" என்று உறுமினார். 

துறவி புன்னகை மாறாமல் "இப்போது நீர் நரகத்தில் இருக்கிறீர்" என்றார்.

இதைக் கேட்ட சாமுராய் சற்றே தெளிவு பெற்றவராய் உடனே பின் வாங்கினார். 

துறவியைப் பணிந்து வணங்கி 

"ஐயா, 

அறியாமல் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று சொன்னார்.

இப்போதும் அதே புன்னகையுடன் துறவி சொன்னார்

"நீர் இப்போது சொர்க்கத்து வந்து விட்டீர்".

.மே தினம்

உழைப்பாளர்தினம்

வாழ்த்துகள்.

உழைப்பாளர்கள் என்றதும் நினைவுக்கு வருவது

பெண்கள்.


Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk