வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் தனக்கான தனித்தனி விருப்புவெறுப்புக்கான
இயல்பூக்கங்களைக்கொண்டவர்கள்.மாற்றாரின் பேச்சுக்கும் கருத்திற்கும் உடன்படுதலைச் சந்தர்ப்பங்களும் பிற புறச்சமூகக்காரணிகளும் ஏற்படுத்துமேயன்றி
எந்த இயற்கை,அறிவியல் விதிகளினடிப்படையிலும்
மற்றவர்களோடு ஒத்துப்போகவேண்டிய
அவசியங்கள் இல்லை.
இதைஉணராது
தான் என்ற உணர்வால் உந்தப்படுகிற மனிதன் தன்கருத்துகளேசரி
என்றும், தன் சொற்களே வலிமைவாய்ந்தன என்றும்நம்புகிறான்.
நம்பவதோடு அதனை எதிராளிகளும் ஏற்கவேண்டுமென முயல்கிறான். இது வன்புணர்ச்சிக்கு ஒப்பானது.
இயல்பாகவே தான் என்ற உணர்வு ஓங்கிக்கிடக்கிற தன்னிலிருந்து மாறுபட்ட எதிர்மனிதன் இத்தகு சூழலில் எதிர்வினையாற்ற உந்தப்படுகிறான்.
அங்கே முரண்பாடுகள் உண்டாகின்றன.எதிராளியின் கருத்தும் சொல்லும் சரியாகவே இருந்தாலும் அதற்கு உடன்பட மனம் ஒத்துழைப்பதில்லை.இதுவே மனிதர்கள் சிக்கலில் சிக்கிக்கொள்வதற்குப் பெரும்பாலும் துணைநிற்கிறது.காரணமாகிறது.

பெற்றோர்,வாழ்க்கைத்துணை,
குழந்தைகள்,உற்றார்,உறவினர்,நண்பர் என அனைவரும் தன் சொல்லடிப்படையிலும்
கருத்தினடிப்படையிலும்
வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.அவரவர்க்கென்ற தனித்த விருப்புவெறுப்புகளுண்டு என்பதை உணர்தல் அவசியம்.
தன்கருத்தையே முன்னிருத்தி வாழ்ந்து அடுத்த தலைமுறையையே சிக்கலுக்குள் தள்ளிய வரலாற்றுச்சான்றுகள் உலகில்
இனம் மொழி பண்பாடு கடந்து ஏராளாமாக நிரம்பிக்கிடப்பதைக் காணமுடிகிறது.

உடல்வளம் பெரும்பாலும்கெட்டுப்
போகக்காரணமாகவுள்ள ஐம்புலன்களில் ஒன்றான வாயே மனிதவாழ்வில் மனவளச்சிக்கல்களுக்கும் வாழ்வியல்சிக்கல்களுக்கும்
காரணமாக அமைகிறது.
நுணலும் தன்வாயால் கெடும் என்னும் தமிழகமூத்தோர்வாக்கும்
Think before you speak என்னும் மேற்கத்திய வாக்கிலுமுள்ள அடிப்படைவாதம் இங்கு சிந்திக்கத்தக்கது.
.
நன்றி.

விதை :
அர்த்தமில்லாமிலும்,
தேவையில்லாமிலும்
பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். (Loose Talks) -

No comments:
Post a Comment