வணக்கம்.
.
வெல்பவர்கள்
தளர்வதில்லை!
தளர்பவர்கள்
வெல்வதில்லை !
Sankaran Nsk
வானம் எப்படி அவ்வளவு தூரம் போனது என்று #கர்ணபரம்பரை கதை ஒன்றுண்டு.
சிறு வயதில் நாம் அனைவருமே கேட்டதுதான்.
பாட்டி ஒருத்தி கோலம் போட்டு நிமிர்கையில் வானம் அவள் முதுகில் இடித்ததாம்.
உடனே 'எட்டாத உயரத்துக்குப் போய்த்தொலை' என்று அதைச் சபித்தாள்.
அப்போது கைக்கு எட்டாமல் போன அது, பிறகு திரும்பவில்லை.
#கற்பனைவளம்.
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
கூடுதல் தகவல் –
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம்.
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே.
இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம்.
(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு
அடுத்த பதிவரைப் பார்க்கப் போகலாம்)
நல்ல உச்சரிப்பு-
செய்தியாளர் ஷோபனா ரவி
தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காரணத்தைத் தெரிந்துகொண்டால் எழுத்துப் பிழையும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும் இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?
உதாரணமாக-
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!
இவை, உச்சரிப்பின் வசதிக்காகவே இப்படி வைக்கபட்டன.
உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்
இதை எல்லாரும் படித்திருப்போம்-
வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)
மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)
இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்) இதுவும் தெரிஞ்சதுதான்.
எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.
கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.
சொற்களில், மெல்லினத்தை அடுத்து
வல்லின எழுத்துகள் வரும்.
(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)
க ங – எங்கே – ங் க
ச ஞ – மஞ்சள் – ஞ் ச
ட ண – துண்டு – ண் ட
த ந - வந்தது – ந் த
ப ம – பம்பரம் – ம் ப
இடையின ஆறெழுத்தும் இடையில் செருகி
கடைசியாக
ற ன – சென்றது – ன் ற
அவ்வளவு தாங்க...
உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ ஈர்ப்பில் தானே இயங்குகிறது.
நெட்டை னா குட்டை
பள்ளம் னா மேடு
தொப்பை னா சப்பை
ஆணுன்னா பெண்.
வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல். ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)
ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?
முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.
அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.
இதே மாதிரித்தான் -
சின்ன ர என்பதும்
பெரிய ற என்பதும் தவறு!
ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது
- மரம், கரம், உரம்
ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி
- மறம், அறம், முறம்
வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்
இடையில வர்ரது இடையினம்.
அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...
வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)
வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)
இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)
வாழ்க்கை முறையை
இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச
நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக
எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...
இதுல வல்லெழுத்து ரெண்டு எழுத்தா சேந்தமாதிரி வராது.
சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.
என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்
அது முயற்சிதான் !
இதே மாதிரித்தான்
உயிரெழுத்தில்
அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ
ஐ-இ
ஒ-ஓ - என வரும இன எழுத்துகள்
கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை
(ஓசை ஒழுங்கு) அறிந்து
எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும்,
படிப்பவர் நினைவில் நிலைக்கும்.
#நன்றி:#நன்றி:
#உங்கள்பக்கத்தில்யார்?
– #அத்வைத்_சதானந்த்
நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,
#உங்கள்_பக்கத்தில்_இருப்பது_யார்? #உற்சாகமானவரா?
#சுறுசுறுப்பானவரா? #நம்பிக்கையானவரா?
#விரக்தி_எண்ணம்_உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.
.
மன்னா மாமன்னா நீயொரு மாமா மன்னா
பூ மாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளை மாரி
அரசியலில் நீ ஒரு தெள்ளியதோர் முடிச்சவிக்கி
தேடி வரும் முதியவர்க்கு மூடா
நெடுங்கதவு உன் கதவு
என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு...
எதிர்த்து நிற்கும் எதிரிகளை நீ புண்ணாக்கு
மண்ணோடு மண்ணாக்கு
இந்த உலகத்தை அடை காக்கும் அண்டங் காக்கையே
(புறநானூறு : 171)
.
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!
-பிட்டங் கொற்றனைப் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
இன்று சென்று கேட்டாளும் தருவான். சில நாள் கழித்துச் சென்று மீண்டும் கேட்டாளும் தருவான். முன்புதான் கொடுத்தேனே என்று சொல்லாமல் வரும்போதெல்லாம் வெறும் பாத்திரமாக இருக்கும் என் களத்தை நிறைத்து அனுப்புவான். அவனுடைய வேந்தன் மகிழும்படியான பல அரிய செயல்களைச் செய்யும் வேலையுடைய கொற்றன் அவன்.
நல்ல இனத்துக் காளைகளை, தொழுவத்தோடு சேர்த்து கேட்டாலும், களத்தில் குவிக்கப்பட்டிருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகலன்களை யானையொடு வேண்டினாலும் பெரும் கொடையாளனாகிய அவன் வழங்குவான்.
அவன் எனக்கு மட்டும் இப்படிக் கொடுப்பவனல்லன். அதனால் எனக்கு தந்தை போன்றவன். அவனது அடியில் முள்ளும் நோவும் தைக்காதிருக்கட்டும்.. கொடுப்பவர்கள் அரியதாகி விட்ட இக்காலத்தில் உயிர் வாழ்வதாகிய அவனது முயற்சி வாழ்வதாகட்டும்...
---------------------------------------------------------------
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக
நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக
ஓடினார்.
கயிற்றுப் பாலத்தைக் கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார். மழைச்
சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தைக் கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும்
இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனைத்
துணைக்கு அழைத்தாள். இருட்டில்
எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின்
மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது. தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு
அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்
திரும்பிக்கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து
கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல
மெல்ல பாலத்தைக் கடந்தாள்.
பாலத்தைக் கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தைக்
கடந்துவிட்டாள். கணவரைக்
கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்
பாலத்தைத் தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாகத் தோன்றும்.
ஆனால் உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தைத் தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். தூரத்தில்
பார்க்கும் போது அன்பு இல்லாதவர்
போல இருந்தாலும் அருகில் சென்று
பார்க்கும் போது தான் அவரின் அன்பு
தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது
தெளிவாக
தெரிந்தாலும்
அருகில் வரும்போதே பொருள்
புரிகிறது.
*🔯கர்மவினை🔯*
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!!
சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான்.
சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான்.
அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான்.
யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான்.
அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர்.
அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள்.
அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் *"கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது"* என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
*நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!*
*🕉இறை சிந்தனை🕉*
*உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-*
🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐
*ஜனவரி*
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்
*பிப்ரவரி*
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்
*மார்ச்*
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்
*ஏப்ரல்*
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
*மே*
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்
*ஜீன்*
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
*ஜீலை*
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)
*ஆகஸ்ட்*
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்
*செப்டம்பர்*
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்
*அக்டோபர்*
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
*நவம்பர்*🛏
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்
*டிசம்பர்*🛏🛏
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்
63 நாயன்மார்களின் பெயர்கள் பற்றி இங்கு காண்போம்.
1. சுந்தரர்
2.திருநீலகண்டர்
3.இயற்பகையார்
4.இளையான்குடி மாறனார்
5.மெய்பொருள் நாயனார்
6 .விறன்மீண்டர்
7.அருள் நீதியார்
8.எறிபத்த நாயனார்
9.ஏனாதியார்
10.கண்ணப்பர்
11.குங்கிலயக்கலயர்
12.மானக்கஞ்சாரன்
13.அரிவாட்டாயர்
14.ஆனாயர்
15.முருகன்
16.மூர்த்தி
17.பசும் பதியார்
18.நந்தனார்
19.திருக்குறிப்புத் தொண்டர்
20. சண்டேசுவரர்
21.திருநாவுக்கரசர்
22. குலச்சிறையார்
23.பெருமிழலைக் குறும்பர்
24.காரைக்கால் அம்மையார் 25.அப்பூதியடிகள்
26.திருநீலநக்கனார்
27.நமிநந்தியடிகள்
28.திருஞான சம்பந்தர்
29.கலிக்காமர்
30.திருமூலர்
31.தண்டியடிகள்
32.மூர்க்கனார்
33.சோமாசிமாறன்
34. சாக்கியர்
35.சிராப்புலியார்
36.சிறுத்தொண்டர்
37.சேரமான் பெருமாள்
38.கணநாதனார்
39.கூற்றுவனார்
40.புகழ்ச் சோழன்
41.நரசிங்க முனையரையர்
42.அதி பத்தர்
43.கலிகம்பனார்
44.கலியனார்
45.சத்தி நாயனார்
46.ஐயடிகள் காடவர்கோன்
47.கணம் புல்லனார்
48.காரியார்
49.கூன்பாண்டியன்
50.வாயிலார்
51.முனையடுவார்
52.கழற்சிங்கன்
53.இடங்கலியார்
54.செருத்துணையார்
55.புகழ்த்துணையார்
56.கோட்புலியார்
57.பூசலார்
58.மங்கையர்க்கரசியார்
59.நேசநாயனார்
60.கோச்செங்கணான்
61.நீலகண்ட யாழ்ப்பாணர்
62.சடையனார்
63.இசை ஞானியார்
இத்தகைய சிறப்பினை உடைய
63 நாயன்மார்களின் பணிகள் என்றுமே அழியாப் புகழ் பெற்று
சிவபெருமானுக்கு புகழ் பெற்றுத்தருபவை ஆகும்.