Sunday, May 01, 2016

இரட்டை இலை... பாண்டு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வடிவமைத்தது யார்? 


அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வடிவமைத்தது யார்?

550 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பாண்டுவின் டிரேட் மார்க், அவரது சிரிப்பு. அதிமுக-வின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை வடிவமைத்தவர் இவர்தான். அந்த அனுபங்களை பகிர்ந்து கொள்கிறார் பாண்டு. ‘அப்போதுதான் அதிமுக-வை எம்ஜிஆர் தொடங்கி இருந்தார். ஒருநாள் இரவு எம்ஜிஆர் வீட்டுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. உடனடியாக கிளம்பி சென்றேன். என்னைப் பார்த்ததும் எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி ‘சாப்பிட்டாயா?’ என்பதுதான். பிரியாணியும் சிக்கனும் கொண்டு வரச்செய்து சாப்பிட வைத்தார். அதிமுக கொடியை உருவாக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வீட்டின் கீழ்தளத்தில் உள்ள ஓர் அறையில் வேலை முடியும்வரை பூட்டி வைக்கப்பட்டேன். எம்ஜிஆர் அறிவுறுத்தலின்படி நான்கு முறை மாற்றி மாற்றி, இறுதியாக இப்போது நீங்கள் பார்க்கும் அதிமுக கொடி முழுவடிவம் பெற்றது. அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை உருவத்தை மனதில் கொண்டு முதலில் கொடியை உருவாக்கினேன். அதாவது அறிஞர் அண்ணா விரைப்பாக கையை நீட்டிக் கொண்டிருப்பதுபோல் அண்ணாவின் உருவத்தைக் கொடியில் உருவாக்கியிருந்தேன். எம்ஜிஆருக்கு திருப்தி இல்லை. ‘இது போதாது. எம்.ஆர்.ராதா என்னைச் சுட்டார். அண்ணாவும் என்னை நோக்கி ஏன் சுடவேண்டும்?’ என்றார். எனவே, அண்ணா தனது விரலை மேலாக நீட்டுவது போல் கொடியில் வடிவமைத்தேன். 1977 தேர்தலுக்கு முன்பாக எம்ஜிஆர் மீண்டும் என்னை அழைத்தார் கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை உருவாக்கும் பொறுப்பை கொடுத்தார். நானும் வடிவமைத்து கொடுத்தேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பல்கலைக்கழக அரங்கில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. என்னை மேடைக்கு அழைத்த எம்ஜிஆர், நான்கு சவரன் தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கினார்’. இவ்வாறு எம்ஜிஆருடனான தனது மலரும்நினைவுகளை பகிர்ந்து கொண்டார், நடிகர் பாண்டு.

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk