Thursday, July 28, 2016

ஆசிரியரின் அழுகை

‪#‎ஆசிரியரின்அழுகை‬
**************************
+2 வகுப்பு தமிழ் பாடவேளை. ரெண்டு நாள் விடுமுறையில் படிச்சுட்டு வர சொன்னேன் .
தேர்வு
எழுதலாமா.
சில மாணவர்கள் உடனே வந்தனர்.
பலர் அப்பொழுது தான் படித்தனர். சிலர் பையில் எதையோ
தேடிக் கொண்டே இருந்தனர்.
இவர்கள்
அனைவரையும் ஒருமுகப்படுத்தி எழுத வைக்க வேண்டும். கொஞ்சம் இறுக்கமாகத்தான் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
எழுதி முடித்ததும் அடுத்த நாளுக்கான வேலையை கொடுத்து விட்டு திருத்திக் கொண்டிருந்தேன்.
ஐயா
என்று ஒரு மாணவியின் குரல். அவள் எப்பொழுதும்
முன்னதாகவே
படிப்பாள் எழுதுவாள்.
என்னம்மா என்றேன்.
ஏன் ஐயா
இப்போல்லாம் சந்தோசமா
இருக்க மாட்றிங்க.

ஏன் அப்படி சொல்லுர?

இல்ல....
போன வருசம் எல்லாம்
எங்ககிட்ட
பேசிட்டு ஜாலியா
சந்தோசமா
பாடம்
நடத்துவிங்க
இப்போ எல்லாம் கோபமாதான் இருக்கிங்க .
கோபப்படாதிங்க ஐயா.
.
திருதிருவென்று விழித்தேன்.
எதைச் சொல்வது.
என்னவென்று சொல்வது???
.
*என் போன்ற பலரின் சுயநலத்தின் மீதுதான்     நீங்கள் கட்டப்படுகிறீர்கள் என்று எப்படிச் சொல்வது?*

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk