தமிழர்கள் வரலாற்றில்
புத்தாண்டு
கொண்டாடும் வழக்கமற்று இருந்தவர்கள்.
எப்படி இன்று
காதலர்தினம்
அன்னையர்தினம்
என்று புதுபுதுக்கொண்டாட்டங்கள் வணிகத்தின் அடிப்படையில் தோன்றியுள்ளனவோ அதுபோன்று
புத்தாண்டு வழக்கமும் இனக்கலப்பின் அடியாகவே தோன்றியிருக்கக்கூடும்.
தமிழர்தம் வாழ்வில் #
இறைவழிபாடும் முற்காலங்களில் பெரும் இடத்தைப் பெற்றிருக்கவில்லை.
இயற்கைவழிபாடே பெருவழிபாடாக இருந்திருக்கிறது.
தமிழர்கள் மனிதவாழ்வின் வளர்ச்சி நிலைகளில் தங்களுக்கு #உதவியபொருட்களை வழிபடுகிற நிலையைப் பின்னாட்களில் தமிழர் (உழவுக்கருவிகள் படை கருவிகள் ) மேற்கொண்டிருக்கக்கூடும்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் #இயற்கையை வழிபடும்
(கதிரவன் ,மரம் ,மழை ,ஆ,ஞமலி)நிலைக்கு மாறியிருக்கவேண்டும்.
அடுத்தநிலையில்
#முன்னோர்வழிபாடாக
(குலதெய்வம், சிறுதெய்வம், நடுகல்) வளர்ச்சிபெற்று இறையியல் கொள்கைகள் ஏற்பட்டிருக்கும்.
தொடர்ந்து நிலப்பாகுபாடும்
அவ்வவ் நிலத்திற்குரிய
#இறையியலும் நிலைப்பெற்றிருக்கும்.
இனக்கலப்பும் வல்லாதிக்கக்கோட்பாடுகளும் இறையியலிலும் தன் கொடுங்கரங்களை நீட்டி
#ஆளுகைக்குட்படுத்தியிருக்கும்.
இங்கிருந்து
வழிபாட்டிலும்
வழிபாட்டு முறைகளிலும்
இறையியல் கொள்கைகளிலும்
வல்லாண்மையின் கட்டுப்பாடுகள்
குவிக்கப்பட்டு
அதிகாரம் விரிவடைந்திருக்கும்.
#புத்தாண்டு_கொண்டாட்டங்கள் குறித்த சங்க இலக்கியத் தரவுகள் ஏதும் இல்லவே இல்லை எனலாம்.
ஆயின் தைத்திங்கள் குறித்து தரவுகள் காணக்கிடைக்கின்றன.
தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - நற்றிணை (80 மருதம் - பூதன்தேவனார்)
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" - குறுந்தொகை (196. மருதம் - தோழி கூற்று)
"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து" - ஐங்குறுநூறு (84, 9. புலவி விராய பத்து)
"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ" - கலித்தொகை (59, தளை நெகிழ்... எனத்தொடங்கும் பாடல்)
தமிழ் அறிஞர்களால் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் ஐங்குறுநூற்றிலும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்திருக்கிறார்கள்.
சித்திரை முதன்முதலில் எங்கே வருகிறது என்று தெரியுமா?
சிலம்பில் இந்திர விழவூரெடுத்த காதையில் இடம்பெறுகிறது.
Sankaran Nsk
No comments:
Post a Comment