#விளையாடவிடுங்கள்.
#கோடை_விடுமுறை.
" குழந்தைகள் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் அடைந்துகிடக்கிறார்கள். கையில்
இருபத்துநான்கு மணிநேரமும் அலைப்பேசி " என்று பொதுவாய் ஆங்கலாய்க்கிறோம்.
வீதியில் குழந்தைகள் விளையாடத்தயாரானால்
நம் அன்புக்குரிய பெரியவர்கள்
உதிர்க்கிற முத்துக்கள் கொஞ்சநஞ்சமல்ல..
..
#டேய்காஸ்ட்லி_கண்ணாடி_உடைஞ்சிடும்...
#இங்கவந்துஏண்டா_விளையாடறீங்க....
#இதுங்கள்ளா_புள்ளைங்கன்னா_நெனைக்கறீங்க..
#இந்தப்பக்கம்வந்த_உங்கப்பாட்ட_சொல்லுவேன்.....
#டேய்_என்னடாஒரே_காட்டுக்கூச்சல்_அந்தப்பக்கம்போய்த்தொலைங்க...
#உங்களுக்கெல்லாம்வீடுவாசலே_கெடையாதா....
இத்தகுக்கேள்விகளை வெகு அனயாசமாக எழுப்புகிறார்கள்.
தங்கள் இளமைப்பிராயத்து நினைவுகளை
#வேண்டுமென்றேமறந்துவிட்டு....
#அமைதியைவிரும்புகிறோம்
என்று பெரியவர்கள்
சின்னஞ்சிறுகுழந்தைகள்
மீது வன்முறை நிகழ்த்துகிறார்கள்.
இது மிகப்பெரும் சமூக அவலம்.
ஓடி விளையாடும் குழந்தைகளை
இப்படி அடக்கி ஆள்வதே
அவர்கள் நாளை பெரியவர்களானதும்
உடற்பயிற்சி என்றபெயரில்
#முட்டிவலியோடு நடையாய் நடப்பதற்கும்
காலைமாலைகளில்
உள்ளரங்க விளையாட்டுகளோடு #மல்லுக்கட்டுவதற்கும் வழிவகுக்கிறது...
உணர்வோமா????
Sankaran Nsk
No comments:
Post a Comment