அரசு,வேம்பு,கருவை,
வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர் .
அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவைகளின் இலைகள் இலைகள் எனப்படாமல் ‘கீரை’ ஆகின்றது.
மண்ணிலே படர்ந்து கிளைத்து வளரும் கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது.
கோரை ,அறுகு, வகைத்தாவரங்களின் இலைகள் ‘புல்’ என பெயர் பெறுகின்றன.
மலைகளில் உயர்ந்து விளைகின்ற உசிலை போன்ற இலைகளுக்குப் பெயர் ‘தழை’ எனப்படுகிறது.
வரகு, நெல்,முதலியவற்றின் அகலமற்ற உயரம்குறைந்த பயிர்களின் நீண்ட நெடிய இலைகள் ‘தாள்’ என வழங்கப்படுகிறது.
தாழை,சப்பாத்தி, கள்ளி, போன்ற வறண்ட நிலத்தாவர இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’ எனப்படுகிறது.
நாணல் ,கரும்பு ஆகியவற்றின் இலைகள் ‘தோகை’ என்று தமிழ் கூறுகின்றது.
தென்னை, கமுகு, பனை முதலிய நெடிதாய் வளர்ந்து உயர்ந்த மரங்களின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப் படுகின்றன.
நம்தமிழன்றி வேறு எம்மொழியிலும் இத்தகைய நுண்ணிய வேறுபாடுகள் இலைகளின் அடிப்படையில் கூறப்படவில்லை.
வாழ்வாங்கு வாழ வாழ்வைப்பகுத்ததோடு தமிழ் நிற்காமல் தாவரவியல் அறிவையும் மொழியின் வாயிலாகப்புகட்டியது தமிழின் பெருமைகளுள் ஒன்று.
Sankaran Nsk.
No comments:
Post a Comment