Saturday, February 04, 2017

கொக்கொக்க

கடும்மழை
வெளுத்து
வாங்கியது.
வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வந்து கொண்டிருந்தது.
மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். ஆனால்  ஒருவன் மட்டும் நகரவே இல்லை.
*என்னைக் கடவுள் காப்பாற்றுவார்*
என்று  வணங்கிக் கொண்டிருந்தான்.
நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது.
உடனே வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான்.

அப்போது அவ்வழியில்
வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள்.
ஆனால்

*"என்னைக் கடவுள் காப்பாற்றுவார்."*

என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து
நீர் மட்டம் அதிகரித்தது.
உடனே
அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும்
ஒரு படகு வந்தது.
அவர்களும் அழைத்தபோது,

*"கடவுள் காப்பாற்றுவார்"*

என்று சொல்லி போக மறுத்தான்.

இறுதியில்
வெள்ளநீர் அதிகரித்து,
இவன் இறந்து விட்டான்.

*மேலுலகத்தில்
கடவுளைச்
சந்தித்தான்.*

"இறைவனே,
உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு,
நான் இருந்தேன்.
ஆனால் கடைசி வரை
நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை."
என்று கேட்டான்.
.
அப்போது கடவுள் சொன்னார்.

*"உன்னைக் காப்பாற்ற இரண்டு படகுகளை அனுப்பினேன்.
நீதான் அதைப்பயன்படுத்திக் கொள்ளவில்லை."*

*SankaranNsk*

*📚ப.பி📚*

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk