வணக்கம்.
.
“வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் நானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியர் கோ!”
- காரிகை பழம்பாடல்.
தலைவி தோழியிடம் சொல்கிறாள்
”தோழிப்பெண்ணே!
அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று தன் ஊரைச்
சொன் னான்.
நானும் அவன்
வஞ்சிக்க மாட்டேன் எனச் சொல்கிறான்
என்றெண்ணிச் சம்மதித்தேன்.
அந்த வஞ்சி நாட்டுத் தலைவன்,
வஞ்சியேன்,வஞ்சியேன்
என்று சொல்லியும்
என்னை
வஞ்சித்துவிட்டான்("சென்றவன்
இன்னும் வரவில்லை”).
தமிழ் வாழ்க!
No comments:
Post a Comment