*சொர்க்கமா...நரகமா?*
முன்பொரு காலத்தில்
ஜப்பான் மன்னருக்கு
பெரும் சந்தேகம் வந்தது.
உண்மையில் சொர்க்கம் ,நரகம் என்று ஒன்று உண்டா என பலரும் விளக்கம் கொடுக்க முன் வந்தனர்.
உண்டென்றால் எங்கிருக்கிறதெனவும் இல்லையென்றால் எப்படி என்றும் கேள்விகேட்டுத் திணறடித்தார் மன்னர்.
பிறகு ஒரு ஜென் துறவி வந்தார் இயற்கையின் படைப்பையே சந்தேகிக்கிறாயா மூளைக்கெட்ட மன்னனே,
எனச் சொல்ல...
என் அவைக்கு வந்து என்னையே அவமதிக்கிறாயா என வாளை உருவினார் மன்னர்.
*இதோ இதுதான் நரகம்*
என்றார் துறவி.
சுதாரித்த மன்னன் வாளை உறையிலிட்டான்.
*இதோ இதுதான் சொர்க்கம்* என்றார் துறவி...
*🔵SankaranNsk🔵*
*ப.பி*
No comments:
Post a Comment