பத்தாம் வகுப்பு மாணவர்களிடம்
திருக்கார்த்திகையை முன்னிட்டு
வகுப்பறையில் ஊடாடிக்கொண்டிருந்தபோது..
" #அவல்பொரி_யார்வீட்ல..
#நெல்பொரி_யார்_வீட்ல? "என்றேன்.
" #நெல்லுப்பொரியா...
#அப்படினா " என்றார்கள்.
#தமிழகத்தின்நெற்களஞ்சியத்திற்கு இப்படி ஒரு சோதனை.
ஆமாம் ,
அவர்களுக்கு
#நெல்லே தெரியாதே.
அரிசி மட்டும்தானே தெரியும்.
ஆயிரமாயிரம் நெல் வகைப்பாடுகள் இருந்த ஊரில் இன்று அவர்களுக்குத் தெரிவதுஒன்றே ஒன்றுதான்...
அதுவும்
#கர்நாடகப்பொன்னி...
அதன்விளைவே இப்பதிவு.
#நெற்பொரிசெய்வது_எப்படி?
#நெற்பொரி என்பது
மோட்டாரக நெல்லை ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு அதனை எட்டுமணி நேரம் காய விட வேண்டும். அதன் பின் நெல்லை அடுப்பில் காயும் சட்டியில் அடுமணலுடன் சேர்த்து கிளர வேண்டும். ஒரு நேரத்தில் நெல் வெடித்து நன்றாக அரிசி உப்பும் .
பிறகு அதனைப் புடைத்து உமியை நீக்கி விட்டு நெற்பொரியைப் பிரித்து எடுக்கலாம்.
ஒருபடி அரிசி கிடைக்கக்கூடிய
நெல்லில் சுமார் 8 படி பொரியைத்தயார் செய்யலாம்.
#அரிசி_பொரி என்பது புழுங்கலரிசையைத் தண்ணீரில் உப்பு சேர்த்தும், சேர்க்காமலும் ஊறவைத்து அடுமணலுடன் சூடாக்கி பொறித்து எடுப்பது. இது ஒரு அரிசியை விட 8 மடங்கு பெரியதாய் உப்பி வரும்.
நெற்பொரியைக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்குக் கஞ்சியாகச் செய்து கொடுக்கலாம். மேலும்
மோர், தயிர் வெல்லம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து சிறு உணவாக உட்கொள்ளலாம்.
பொரிஉருண்டையும் செய்யலாம்.
அதுசரி உங்களுக்கு...
#சோளப்பொரி தெரியுமா?
உங்களுக்கே #பாப்கார்ன் தானே தெரியும்
No comments:
Post a Comment