Wednesday, May 17, 2017

தேர்வுமுடிவுகளும்திருவாரூர்பேருந்துநிலையமும்

#தேர்வுமுடிவுகளும்
#திருவாரூர்பேருந்துநிலையமும்

தேர்வுமுடிவுகள் வரும்
நாளிதழுக்காக தைலம்மை வாசலில் மதியம் இரண்டுமணிமுதல்  காத்திருப்போம்.எதிரே இருந்த சரவணா ஸ்டோர்வாசலில் நிற்போம்.சற்றுவிடுத்து ரோஸ்லாண்ட் வாசலில் இப்படிநின்று நின்றும் கடைசியில் நாளிதழ் வாங்கமுடியாது.
நாளிதழ் வந்துவிட்டது என்றதும் பேருந்துநிலையத்திலிருந்த எல்லோருக்குள்ளும் தீப்பற்றிக்கொள்ளும்.

நாளிதழ்கள் கூடுதல்விலைக்குக்கூட கிடைக்காது.
(மாலைமுரசில் எண்வரவில்லை என்று தற்கொலைக்குமுயன்று மருத்துவமனைக்குப்போய் மறுநாள் நாளிதழில் அவனே தேர்ச்சி பெற்றதாய் அறிவிப்பு வருவதெல்லாம் தனிக்கதை).
நோஞ்சானாக நின்று ,
அடுத்தவன் வாங்கியிருப்பதில் பத்தோடுபதினொன்றாய் கழுத்துநீட்டிப்பார்த்து நம் எண் கண்ணில்பாடாதபோது நெஞ்சம்படபடத்து,
நா வறள,
கண்ணில் நீர்திரள,,
எண்கண்டதும்
தேர்வான
மகிழ்ச்சியோடு ஆறு கி.மி மிதிவண்டியில் மிதிமிதியென்று மிதித்து  ஆறு ஏழுமணிக்கு வீடுவந்தால் வாசற்படியில் காத்திருக்கும் குடும்பம் கேட்கும் "எங்கடா பேப்பர்" என்று.
தேர்வானதைக்கூட இரண்டாம்பட்ச
மகிழ்ச்சியாக்கிவிடும்.
தங்கையோ "அம்மா இவன் போங்கு
நம்பாத "என்பாள். அதெல்லாம்போச்சு...தொழில்
நுட்பத்தால் நாம் தொலைத்ததிகம்.

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk