மலர்களுக்கு தமிழர்கள் இட்ட நுட்பமான பெயர்கள்.
அரும்பு
நனை
முகை
மொக்குள்
முகிழ்
மொட்டு
போது
மலர்
பூ
வீ
பொதும்பர்
பொம்மல்
செம்மல்
.
அரும்பு - அரும்பும் தோன்றுநிலை,
.
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை,
.
முகை - நனை முத்தாகும் நிலை,
.
மொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை,
.
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்,
.
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு,
.
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை,
.
மலர்- மலரும் பூ,
.
பூ - பூத்த மலர்,
.
வீ - உதிரும் பூ,
.
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை,
.
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்,
.
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை .
என மலர்களின் ஒவ்வொரு நிலைக்கும்
நுட்பமாகப் பல பெயரிட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
Tuesday, August 30, 2016
தமிழும் தமிழரும் பூக்களும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
நான்
SankaranNsk
No comments:
Post a Comment