Wednesday, August 03, 2016

கடவுளுக்கு உறக்கமுண்டா?

*கடவுளுக்கு தூக்கம் வருமா ?*
சீடன் ஒருவன் தன் குருவிடம்,
.
குருவே நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா,
வராதா?
என்றுக் கேட்டான்.
அதற்கு குரு புன்னகைத்தவாறே அவனிடம் ஒரு கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார்.
இந்தக் கண்ணாடியை கையில்
பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது
என்றார் ஞானி.
சீடனும் அப்படியே நின்றான்.
சற்று நேரத்தில் அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது. அதிலிருந்து விடுபட பல
முயற்சி களைக் கையாண்டான். ஆனால் அது அவனுக்கு பலன் அளிக்க வில்லை. 
தன்னை மறந்து ஒரு வினாடி கண்ணயர்ந்தான்.
கண்ணாடி
கீழே விழுந்து
     
சி
              த
       றி
                 து.
பதறிப்போன சீடன் கலவரத்துடன் குருவைப் பார்த்தான்.
பயப்படாதே
சீடனே
நீ ஒரு வினாடி
கண் அயர்ந்ததால் உன் பொறுப்பில் இருந்த
கண்ணாடி சின்னாபின்னமாகி விட்டது.
இந்த பிரபஞ்சம் முழுவதையும்
தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்ன ஆகும்?என்று யோசித்துப் பார்
என்று கூறியதும் சீடனின் சந்தேகம் தெளிவானது.
.
 *SankaranNsk*

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk