Friday, April 22, 2016

யார் குரு?



பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!
************************
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
.
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேறி என நினைக்கக்கூடும்.
.
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளைச் சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதைத்தவிர்க்கவும். அது உங்களைப்பயந்தவராக காட்டக்கூடும்.
.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதைக்கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு இதமான குரலில் பேசவும்.
.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்...
.
நன்றி.

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk