திருக்குறளில் இன்னிசை அளபெடை (கருவிளம், கூவிளம் கொண்ட விளச் சீர்கள்):
------------------------------------------------------
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும்
சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக்கடை
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின்
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல்
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழத்தொறூஉம் காது அற்று உயிர்
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ்
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது
----------------
திருக்குறளில் இசைநிறை அளபெடை ( மா, விளச் சீர்கள்):
------------------------------------------------------
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தேறினும் தேறாவிடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப் படாஅர் எனின்
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை
குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர்
தேறான் பகாஅன் விடல்
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப் படாஅர் எனின்
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை
குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர்
No comments:
Post a Comment