Tuesday, November 20, 2018

மழையின்கதை

#மழைவருதுமழைவருது...

வட கிழக்கு பருவ மழை தான் தமிழகத்திற்கு பெரும்பான்மை மழையைத்தரக்கூடியது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் மழை நிழல் பகுதியாக இருந்ததாம். வடகிழக்கு பருவ மழையின் போது தான் வழக்கமாகத் தமிழகத்திற்கு அறுபது விழுக்காடு் மழை கிடைக்குமாம் .
வடகிழக்கு பருவமழை என்பது
தென்மேற்கு பருவமழையை ஒப்பிடும் போது
முற்றிலும் மாறுபட்டது.

        வட கிழக்கு பருவ மழை
முற்றிலும்
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,
தாழ்வு மண்டலம்,
சுழல் காற்று,
வலு இல்லாத புயல்,
மிக வலுவான புயல் மூலம் தான் மழை கிடைக்கும்.

வடகிழக்கு பருவ மழையின் காலத்தில் தான் கடலின் மேற்பறப்பு வெப்பநிலை ஒரு பாகை உயர்ந்து காணப்படும், அப்போது ஈரப்பதம் மிக்க காற்று சூடாகி மேல் எழும்பி #புயலாகமாறும்.

அரபிக் கடலைக்காட்டிலும்
#வங்கக்கடலில்தான்
அதிக புயல்,
குறைந்த காற்றழுத்தம்,
வலி மண்டல காற்று சுழற்சி மற்றும்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படுகிறது அதற்குக் காரணம் அரபிக் கடலின் மேற்பறப்பு வெப்பநிலை வங்கக்கடலை காட்டிலும் குறைந்து காணப்படும்.

         #கடலின்_மேற்பறப்பில்_வெப்பம்_இல்லை என்றால் #புயல்இல்லை,
குறைந்த காற்றழுத்தம்,
வலி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படாது.
அதுவும் அந்தமான் பகுதியில் தான் அதிக புயல்கள் உருவாக காரணமாகிறது.

          அந்தமான் கடல் பகுதி இந்திய மெயின் லேண்ட் கடல் பகுதியை விட வெப்பம் சற்று அதிகம். ஒரு புயல் அதனுடைய வலிமையை தக்க வைக்க வேண்டும் என்றால், அதற்கு ஈரப்பதம், மற்றும் வெப்பம் மிக அவசியம். அது கடல் பகுதியில் தான் கிடைக்கும்.

                 #ஒருபுயல்_எவ்வளவுநேரம்_கடலில்_பயணம்செய்கிறதோ, #அவ்வளவு_வலிமையாக_இருக்குமென்று அறிவியலைப் படிக்கும்போது அறியமுடிகிறது. அதனால் தான் அந்தமான் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் படிப்படியாக
வலிமை மிக்க புயலாக மாறிவிடுகிறது ஏன் என்றால் கடல் பயணம் நீண்ட நேரம்.

        புயலுக்கு தேவையான உந்துதல் சக்தி கடலில் மட்டும் தான் கிடைக்கும். அதனால் தான் #கடலோரம் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறுவதில்லை.

2018 ம் எல் நினோ ஆண்டு என்று பிரபல தனியார் வாணிலை ஆய்வு மையம் கூறியுள்ளது அதனால் 2015 ஜ விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிக மழை பெய்ய இருப்பதாக கூறியுள்ளது.

#மழையின்கதை.

Sankaran Nsk

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk