தமிழக சட்டமன்றத்தில் 60 ஆண்டுக ளுக்கும்மே லாக, உறுப்பினராக இருந்த கருணாநிதி, 1957 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2016 - இல் நடந்த சட்டமன்ற தேர்தல்வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றுள்ளார். 1984-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும் , மேலவை உறுப்பினராக இருந்த கருணாநிதி போட்டியிடவில்லை.
தோல்வியே சந்திக்காத கருணாநிதி
மறைந்த கருணாநிதி போட்டியிட்டு வென்ற தேர்தல்கள் மற்றும் தொகுதிகளின் முழு விவரம் இது.
1957 - குளித்தலை சட்டமன்ற தொகுதியில் வென்று முதல்முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக கருணாநிதி தேர்வானார்.
1962 - தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரான பரிசுத்த நாடாரை வென்று மீண்டும் சட்டமன்றத்துக்கு அவர் தேர்வானார்.
1967 - ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டு. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில், சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயகமூர்த்தியை வென்றார்.
1971 - தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை வென்றார்.
1977 - தான் போட்டியிட்ட சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி அதிமுக வேட்பாளர் கிருஷ்னமூர்த்தியை வென்றார். ஆனால், அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பை அதிமுகவிடம் இழந்தது.
1980 - சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுகவின் ஹெச்.வி. ஹண்டேவை வென்றார்.
1989 - சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நான்குமுனை போட்டியில் வென்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.
1991 - சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் கருணாநிதி வென்றார்.
1996 - சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை வென்ற கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வரானார்.
2001 - தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்த இந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
2006 - சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி, ஐந்தாவது முறையாக தமிழக முதல்வரானார்.
2011 - சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2016 - சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தோற்கடித்தார்.
2016-ஆம் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.
Courtesy BBC
Sankaran Nsk
No comments:
Post a Comment