உள்ளே நுழைந்ததும் வாங்க என்று அன்பொழுக அழைக்கும் உரிமையாளர் குரலும்.
மீன்குழம்பின் வாசனையும் நம்மைக்கிறுகிறுக்கவைக்கும்.
திருவாரூர் பழைய புகைவண்டி சந்திப்பருகே நெருக்கடியான இடத்தில் நீலநிற பெயர் பலகை நம்மை வரவேற்கும்.
சுதந்திரக்காலம்தொட்டே ஒரே சுவையுடன் அம்மா கை பக்குத்தோடு
மீன்குழம்பும் மட்டன் குழம்பும் கிடைத்தால் யார்தான் மயங்கமாட்டார்கள்.
அதுவும் சுடச்சுட வறுவல் மீனும், இறாலும், குழம்புமீனும் கிடைத்தால் அசைவப்பிரியர்களுக்குக் கொண்டாட்டம்வந்துவிடாதா?பெரும்பாலும் உரிமையாளரே பரிமாறுகிறார். இப்போதெல்லாம் அவர் அன்புமகனும் பரிமாறுகிறார்.
வேறென்னசாப்பிடறீங்க? என்று அவர்கள் கேட்கிற அழகே வயிற்றை நிறைக்கும்.
நாம் சாப்பிட பதினைந்து நிமிடமென்றால் இடம்பிடிக்க அரைமணிநேரமாவது ஆகும்.
காரணம்
ஓரேநேரத்தில் பத்து பனிரண்டுபேரே சாப்பிடமுடியும். நாம் அமர்ந்து சாப்பிட்ட இடத்தைப்பிடிக்கப் போட்டிநடக்கும்.
திருவாரூர் வரும் பல அரசு தனியார் உயரதிகாரிகளின் மதிய , இரவு உணவு மனோன்மணி சாப்பாடுதான். இதற்காக வருபவர்களும் உள்ளனர்.
மதியம் இரண்டரை மணிவரை சாப்பாடு கிடைக்கும். இரவு ஏழரைக்கு சாம்பிராணி போட்டதும் கடந்த நாற்பதாண்டுகளுக்கும்மேலாய் நாள்தவறாது சாப்பிடும் (தரமும்சுவையும் புரிகிறதா?) வாடிக்கையாளர் பெரியவர் ஒருவருக்கு முதல்இலை போடுவார்கள். பிறகே மற்றவர்களுக்கு..
சிலவாடிக்கையாளர்கள் இரண்டொரு மீன்துண்டுகள் கேட்கும்போது நாளைக்கு சாப்பிடலாம் என்று நாசுக்காய் மறுப்பார்.இன்றுவரை குறிப்பிட்ட அளவுக்கு அதிகம் உணவைத்தயாரிப்பதில்லை.
ஞாயிறன்றும் அமாவாசையன்றும் கடைகிடையாது.பல அரசு அதிகாரிகள் திருவாரூர்வந்தால் முதலில் சொல்லும் வார்த்தை மனோன்மணி சாப்பாடு சொல்லிடுங்க என்பதாகவே இருக்கும்.
நீங்கள் திருவாரூர் வந்தால் ஒருமுறை சாப்பிட்டுப்பாருங்கள்.
அதன்பின்னர் அந்த மீன்குழம்பும் மட்டன்குழம்பும் திருவாரூர் பெயரைக்கேட்டதும் நாவில் ஊறும்.
No comments:
Post a Comment